சுதந்திரமான நியாயமான விசாரணைக்காக சிபிஐ-யிடம் ஒப்படைப்பு: அரசாணை விவரம்!

இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

By: Updated: June 30, 2020, 02:22:14 PM

sathankulam jeyaraj fennix case : நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ள சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்அப் மரண வழக்கு சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளத்தில் செல்போன் கடை நடத்தியவர் ஜெயராஜ். கடந்த 19ம் தேதி இரவு ஊரடங்கு நேரத்தையும் தாண்டி, ஜெயராஜ் கடையைத் திறந்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. . இதையடுத்து, அவரிடம் போலீசார் கடையை அடைக்கச் சொல்லி கடுமையாகப் பேசியிருக்கிறார்கள். இதற்கு ஜெயராஜ் எதிர்ப்பு தெரிவித்துப் பேசவே, போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

போலீஸ் நிலையத்தில் இருவரையும் போலீசார் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இருவரையும் கைது செய்த போலீசார், கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். அங்குத் தந்தை-மகன் இருவரும் இறந்துவிட்டனர். போலீசார் கடுமையாகத் தாக்கியதில் தந்தையும், மகனும் இறந்ததாகக் கூறி, அவர்களது உறவினர்கள், வியாபாரிகள் மற்றும் சாத்தான்குளம் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகம் முழுவதும் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் பழனிசாமி உத்தரவு

இதனைத்தொடர்ந்து, சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 2 ஏட்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மற்ற போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்துக்கு நீதி கேட்டு, தமிழகம் முழுவதும் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று சி.பி.ஐ.-க்கு மாற்றப்படும் என நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

இது தொடர்பான வழக்கு தற்போது சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அரசாணையை தமிழக உள்துறை வெளியிட்டுள்ளது. அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாவது,

“ சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் குறித்து சூப்பிரண்டு அளித்த அறிக்கையை தமிழக டி.ஜி.பி என்னிடம் வழங்கினார். குறிப்பிட்டுள்ள நேரத்த தாண்டி கடையை திறந்து வைத்ததற்காக ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் மீது 5 குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுத்தொடர்பாக சாத்தான்குளம் தலைமைக் காவலர் முருகன் கொடுத்த புகாரின் பேரில் சப்–இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் வழக்கு பதிவு செய்தார். போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் போன்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவில்பட்டி துணைச் சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட தந்தை- மகன் இருவரும், சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பெனிக்ஸ் 22-ந் தேதி இரவு 9 மணிக்கு, அவரது தந்தை ஜெயராஜ் காலை 5.40 மணிக்கும் உயிரிழந்ததாக ஜெயில் கண்காணிப்பாளர் சங்கரின் புகாரின் பெயரில் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது.

கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் விசாரிப்பதற்காக சி.பி.ஐ. போலீஸ் விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று அரசை டி.ஜி.பி. கேட்டுக்கொண்டுள்ளார்.எனவே டி.ஜி.பி.யின் கோரிக்கையை அரசு பரிசீலித்து அந்த 2 வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிடுகிறது. இதற்கான ஒப்புதலை தமிழக கவர்னர் வழங்கியுள்ளார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Sathankulam jeyaraj fennix case handed over to cbi cm edappadi announcement

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X