Advertisment

Sathankulam: ஜெயராஜ்- பென்னிக்ஸ் கொலை: இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 4 பேர் இதுவரை சிறையில் அடைப்பு

sathankulam news update : ஜெயராஜ்- பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என்று குடும்பத்தார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sathankulam father son custodial deaths, jayaraj fenix custodial deaths, சாத்தான்குளம் சம்பவம், ஜெயராஜ் பென்னிக்ஸ் மரணம், நீதித்துறை நடுவர் பாரதிதாசன், மாஜிஸ்திரேட் பாரதிதாசன், sathankulam atrocity, police attack, judicial magistrate investigation report, judicial magistrate investigation, woman police revathi

sathankulam father son custodial deaths, jayaraj fenix custodial deaths, சாத்தான்குளம் சம்பவம், ஜெயராஜ் பென்னிக்ஸ் மரணம், நீதித்துறை நடுவர் பாரதிதாசன், மாஜிஸ்திரேட் பாரதிதாசன், sathankulam atrocity, police attack, judicial magistrate investigation report, judicial magistrate investigation, woman police revathi

sathankulam news today : சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தொடர்பான வழக்கில் துரிதமாக செயல்பட்ட சிபிசிஐடி , காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 4 பேர் மீது வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது. ஜெயராஜ்- பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என்று குடும்பத்தார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Advertisment

சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் நள்ளிரவில் சிபிசிஐசி போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீதர் தப்பியோட முயன்ற ஸ்ரீதரை நள்ளிரவில் போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்

sathankulam news today : சாத்தான்குளம் சம்பவத்தில் அடுத்தடுத்த திருப்பம்!

சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இரண்டு பேர் மரணம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர்கள் ஆம்புலனிஸ்ல் வீடு திரும்பியது மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்தியது.

லாக்டவுன் நேரத்தில் கடை வைத்து இருந்ததாக கூறி கைது செய்யப்பட்ட இவர்கள் விசாரணை என்ற பெயரில் அடித்தே கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த வழக்கை சென்னை ஹைகோர்ட்டின் மதுரை கிளை தாமாகவே முன்வந்து விசாரணையை துவக்கியது. அதனைத்தொடர்ந்து, இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.

நேற்று (1.720) காலை முதல் சிபிசிஐடி அதிகாரிகள் 12 குழுக்களை நியமித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம் விசாரனை நடத்தப்பட்டது. பின் சாத்தான்குளம் போலீஸ் நிலைய எழுத்தரிடம் தீவிரமாக விசாரணை நடந்தது.

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட்டில் தனது நடன திறமையால் கலக்கி வரும் சரோஜ் கான், கடந்த ஆண்டு வெளியான கலங்க் மற்றும் கங்கனா ரனாவத்தின் மணிகர்ணிகா படம் வரை பல பாடல்களுக்கு நடனம் அமைத்து கொடுத்துள்ளார். ரஜினியின் தாய் வீடு, சிருங்காரம் உள்ளிட்ட தமிழ் படங்களுக்கும் இவர் நடன இயக்குநராக பணியாற்றி உள்ளார்.

Read more at: https://tamil.filmibeat.com/news/coronavirus-bollywood-choreographer-saroj-khan-tested-negative/articlecontent-pf145517-072200.html

Live Blog

sathankulam news updates: சாத்தான்குளம் வழக்கில் சிபிசிஐடி எடுக்கும் நடவடிக்கைகள் குறித்த முழு தகவல்களை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.



























Highlights

    16:03 (IST)02 Jul 2020

    முத்துராஜ் இருப்பிடம் குறித்து சந்தேகம்

    முத்துராஜ் வீட்டில் காவல் ஆய்வாளர்கள் விசாரணை

    சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு வராததால் காவலர் முத்துராஜ் இருப்பிடம் குறித்து சந்தேகம்

    கயத்தாறு சுங்கச்சாவடியில் உள்ள சி.சி.டி.வி.யிலும் முத்துராஜ் குறித்த தடயங்கள் சேகரிப்பு

    15:24 (IST)02 Jul 2020

    ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மறுப்பு

    சாத்தான்குளம் வழக்கில் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் (எஃப்ஓபி) தன்னார்வலர்கள் தொடர்பு இருப்பதாக ஒரு சில செய்தி அறிக்கைகள் வந்துள்ளன. இந்த வதந்திகளை நாங்கள் கடுமையாக மறுக்கிறோம். கொரோனா தொடர்பான பணிகளுக்காக உள்ளூர் போலீஸ் நிலையம் "தன்னார்வலர்களை" பட்டியலிட்டுள்ளது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அவர்கள் FoP இன் உறுப்பினர்கள் அல்ல. அனைத்து தன்னார்வலர்களையும் FoP உறுப்பினர்களாக முத்திரை குத்த முடியாது. கேள்விக்குரிய தன்னார்வலர்கள் FoP உறுப்பினர்களாக பதிவு செய்யப்படவில்லை, அல்லது அவர்கள் எந்த பயிற்சி அமர்வுகளிலும் கலந்து கொள்ளவில்லை அல்லது எந்த FoP அடையாள அட்டையும் வழங்கப்படவில்லை.

    - ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்

    15:21 (IST)02 Jul 2020

    சிசிடிவி பதிவு பொறுப்பு காவலரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை

    ‘சாத்தான்குளம் காவல்நிலைய சிசிடிவி பதிவு பொறுப்பு காவலர் பிரான்சிஸிடம் மாஜிஸ்திரேட் விசாரணை

    *கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் காவலர் பிரான்சிஸிடம் திருச்செந்தூரில் விசாரணை

    14:44 (IST)02 Jul 2020

    தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் - நாராயணசாமி

    செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவுக்கு முன்பே, தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் தமிழகத்தில் சாத்தான்குளம் சம்பவம் போல் மீண்டும் ஒரு நிகழ்வு நடைபெறாமல் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

    14:13 (IST)02 Jul 2020

    காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை

    சாத்தான்குளம் சம்பவம் - தென்மண்டல ஐ.ஜி. முருகன் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்

    நெல்லை, மதுரை, திண்டுக்கல் டி.ஜ.ஜி.க்கள் பங்கேற்பு

    சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த் முரளியும் ஆலோசனையில் பங்கேற்பு

    ஆலோசனை கூட்டத்தில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி மாவட்ட எஸ்.பி.க்களும் பங்கேற்றுள்ளனர்

    சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக 4 போலீசார் கைதாகியுள்ள நிலையில் முக்கிய ஆலோசனை

    14:13 (IST)02 Jul 2020

    முதலமைச்சர் சாத்தான்குளம் வருவது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை

    காவல்நிலையங்களில் பதிவேடுகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்வோம்

    பெண் காவலர் ரேவதிக்கு ஒரு மாதம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது

    பெண் காவலரின் கோரிக்கையின் படி, சம்பளத்துடன் விடுப்பு வழங்கியுள்ளோம்

    முதலமைச்சர் சாத்தான்குளம் வருவது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை

    தொடர் பயிற்சியின் மூலமே சில விஷயங்களை மாற்ற முடியும்

    ஊரடங்கு நேரத்தில் காவலர்கள் நண்பர்கள் குழு சரியாக செயல்படுவதை உறுதி செய்வோம்

    காவலர்கள் நண்பர்கள் குழுவினர் வரம்பு மீறினால் கடும் நடவடிக்கை

    காவலர்களுக்கு போதிய ஓய்வு வழங்கப்படுகிறது

    - தென்மண்டல ஐஜி முருகன்

    14:11 (IST)02 Jul 2020

    போலீசார் முழு ஒத்துழைப்பு

    சிபிசிஐடிக்கு உள்ளூர் போலீசார் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர் - தென்மண்டல ஐஜி முருகன்

    * லாக் அப் மரணங்கள் நடைபெற கூடாது என்பதே காவல்துறையின் விருப்பம்

    * தொடர் பயிற்சியின் மூலம் லாக் அப் மரணங்கள் முற்றிலும் ஒழிக்கப்படும்

    13:53 (IST)02 Jul 2020

    5 ஆண்டுகளுக்கு முன்பு லாக் அப் மரணம் - அப்போதைய எஸ்.ஐ மீது 3 பிரிவுகளில் வழக்கு

    சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, நடந்த விசாரணை கைதி மரணம் தொடர்பான, தகவல் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. அப்போது இருந்து உதவி ஆய்வாளர் ஸ்ரீகுமார், தாக்கியதில், விசாரணை கைதி இறந்ததாக சொல்லப்படுகிறது. அந்த சம்பவத்தை கண்டித்து வியாபாரிகள் மற்றும் மக்கள் தீவிரமாக போராடியதால், சம்பந்தப்பட்ட எஸ்.ஐ ஸ்ரீகுமார் மீது, இந்திய தண்டனை சட்டம் 301, 302, 342 இன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    13:52 (IST)02 Jul 2020

    சாட்சியாக மாறும் சிறப்பு எஸ்.ஐ பால்துரை - அப்ரூவராக மாறும் காவலர் முத்துராஜ்

    சாத்தான்குளம் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பால்துரை, காவலர் முத்துராஜ் ஆகியோர் சாட்சியாக மாற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைமை காவலர் ரேவதியை போல் சிறப்பு எஸ்.ஐ பால்துரை, சம்பவத்தை நேரில் பார்த்தவராக சாட்சியம் அளிக்க உள்ளதால், அவர் கைது செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் காவலர் முத்துராஜ் அப்ரூவராக மாறினாலும், அவர் கைது செய்யப்படுவார் என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    13:44 (IST)02 Jul 2020

    ஒருமாதம் விடுப்பு

    சாட்சியம் அளித்த பெண் காவலருக்கு ஊதியத்துடன் ஒருமாதம் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது

    - தென்மண்டல ஐ.ஜி.முருகன்

    13:31 (IST)02 Jul 2020

    பெண் காவலர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!

    சாத்தான்குளம் இரட்டைக்கொலையில் சாட்சியம் அளித்த பெண் காவலர் ரேவதி வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜெயராஜ்- பென்னிக்ஸ் வழக்கில் ரேவதி சாட்சியமே மிக முக்கியமானதாக மாறிய நிலையில், இன்று அவருடன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தொலைப்பேசி மூலம் பேசினர். அதனைத்தொடர்ந்து ரேவதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 

    13:21 (IST)02 Jul 2020

    ஜெயராஜ் மகள் பெர்சி பேட்டி!

    சாத்தான்குளம் வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடர்பாக உயிரிழந்த ஜெயராஜின் மகளும், பென்னிக்ஸ் அக்காவுமான பெர்சி அளித்திருக்கும் பேட்டி, “ நியாயத்தை நிலைநாட்டிய நீதிமன்றத்திற்கு நன்றி . எங்களுக்கு பக்கபலமாக இருந்த தமிழக மக்களுக்கு நன்றி .முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி .தவறு செய்தவர்களுக்கு உச்சபட்ச தண்டனை அளிக்க வேண்டும் . குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை கிடைக்கும் வரை உயர்நீதிமன்ற கிளை கண்காணிக்க வேண்டும்” என்றார். 

    13:02 (IST)02 Jul 2020

    கைது செய்யப்பட்ட காவலர்கள் வீட்டில் சோதனை!

    சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள கோவில்பட்டியில், காவலர் முத்துராஜ் உறவினர் வீட்டில் தற்போது சோதனை நடைப்பெற்று வருகிறது. கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர் தலைமையில் இந்த சோதனை நடைப்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    12:59 (IST)02 Jul 2020

    சாத்தான்குளம் வழக்கின், உத்தரவு ஒத்திவைப்பு

    சாத்தான்குளம் இரட்டைக்கொலை தொடர்பான வழக்கில் விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். சாட்சியம் அளித்த பெண் காவலரிடம் நீதிபதிகள் பேசினர். அதனைத்தொடர்ந்து, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் உத்தரவை ஒத்திவைத்தனர் . மேலும், தமிழக காவல்துறை மீதான நம்பிக்கை உறுதிப் படுத்தப்பட்டுள்ளது என்றும்,  24 மணி நேரத்தில் சிறப்பான நடவடிக்கை எடுத்தது பாராட்டுக்குரியது எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். 

    12:48 (IST)02 Jul 2020

    சாட்சியம் ரேவதியுடன் நீதிபதிகள் உரையாடல்!

    சாத்தான்குளம் இரட்டைக்கொலையில் சாட்சியம் அளித்த பெண் காவலர் ரேவதியிடம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தொலைபேசி மூலம் உரையாடினர்.  சாட்சியம் அளித்த பெண் காவலருக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் நீதிபதிகள் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    12:28 (IST)02 Jul 2020

    உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி!

    சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான ஆய்வாளர் உள்ளிட்டோரை தூத்துக்குடி மாவட்ட நீதிபதி முன் ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் அனுமதி வழங்கியுள்ளனர். 109 கி.மீ தொலைவில் இருக்கும் கோவில்பட்டிக்கு காவலர்களை அழைத்து செல்வது கடினம் என்பதால் நீதிபதிகள் இத்தகைய உத்தரவை பிற்பித்துள்ளனர். 

    12:18 (IST)02 Jul 2020

    தென்மண்டல ஐஜி முருகன் பேட்டி!

    இன்று தென்மண்டல ஐஜியாக பொறுப்பேற்றுள்ள முருகன் சாத்தான்குளம் சம்பவம் குறித்து பேசினார்.  தந்தை - மகன் உயிரிழப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்களா? என்ற கேள்விக்கு பதில் கூறிய அவர், கைது செய்யப்பட்ட போலீசார், 48 மணி நேரம் காவலில் இருந்தாலே அரசு விதிப்படி சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்றார். லாக்கப் டெத் என்பது தவிர்க்கப்பட வேண்டியது என்பதே காவல்துறையின் நிலைப்பாடு எனவும் ஐஜி முருகன் தெரிவித்தார். 

    12:05 (IST)02 Jul 2020

    சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு..!

    சாத்தான்குளம் வழக்கில் சிபி​சிஐடிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வாழ்த்து தெரிவித்துள்ளது.  இரட்டைக் கொலை வழக்கில், நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை சிபிசிஐடி உருவாக்கியுள்ளது. உண்மையில் பாராட்டுக்கு உரியது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

    12:01 (IST)02 Jul 2020

    காவல்துறையினருக்கு மனநல ஆலோசனை!

    காவல்துறையினருக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட உள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்,  ஏடிஜிபி தாமரைக் கண்ணன் தெரிவித்துள்ளார். போலீசாரின் மன அழுத்தத்தால் சாத்தான்குளம் சம்பவம் நடைபெற்றதாக கருதப்படுகிறது என்றும் ஏடிஜிபி தாமரைக் கண்ணன்  கூறினார். 

    11:59 (IST)02 Jul 2020

    சிபிசிஐடி அதிகாரிகளிடம் நீதிபதிகள் கேள்வி!

    சாத்தான்குளம் வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி அதிகாரிகளிடம் , வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள காவலர்களை எந்த நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளீர்கள்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், தந்தை, மகன் கொலை வழக்கில் எத்தனை பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது? என்று வினவினர். 

    11:53 (IST)02 Jul 2020

    பெண் காவலர் ரேவதிக்கு பாதுகாப்பு!

    சாத்தான்குளம் வழக்கில் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு, உண்மைக்கு புறம்பாக செயல்படாமல் தைரியமாக சாட்சி கூறிய காவலர் ரேவதிக்கு உரிய பாதுகாப்பும், வேலைக்கான சம்பளமும் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு விட்டுள்ளது. விடிய விடிய போலீசார் அடித்ததாக மாஜிஸ்திரேட்டிடம் ரேவதி சாட்சியம் அளித்திருந்தார். 

    11:45 (IST)02 Jul 2020

    உயர்நீதிமன்ற மதுரைகிளையில் விசாரனை தொடங்கியது!

    பரபரப்பான சூழலில் சாத்தான்குளம் கொலை தொடர்பான வழக்கு விசாரணை தொடங்கியது.  தந்தை, மகன் கொலை தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை நடைப்பெற்று வருகிறது.காவலர் ரேவதியை தொடர்பு கொண்டு நாங்கள் பேச இருக்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ரேவதியின் சாட்சியத்தின் அடிப்படையிலேயே உண்மை வெளியே வந்தது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

    11:32 (IST)02 Jul 2020

    வழக்கு பதிவு விவரம்!

    சாத்தான்குளம் லாக்அப் மரண வழக்கில் நேற்றிரவு முதல் அதிகாலை வரை கைது செய்யப்பட்ட 5 காவலர்கள்  மீது உள்நோக்குடன் மரணத்தை விளைவித்தல் (IPC 301) பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கொலை, தடயங்களை அழித்தல் உட்பட மொத்தம் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    11:29 (IST)02 Jul 2020

    ஸ்டாலின் வலியுறுத்தல்!

    சாத்தான் குளம் இரட்டை கொலைக்கு காரணமான அனைவரது பெயர்களும் எப்ஐஆரில் சேர்க்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.  தந்தை, மகன் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு ஸ்டாலி வலியுறுத்தினார். 

    11:25 (IST)02 Jul 2020

    சாத்தான்குளம் வழக்கில் திடீர் திருப்பம்!

    சாத்தான்குளம் வழக்கில் யாரும் எதிர்பாராத திடீர் திருப்பம். சி.பி.சி.ஐ.டி போலீஸ் தரப்பு சாட்சியாகிறார்கள், சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர் முத்துராஜ். இவர்கள் இருவரும் . அப்ரூவராக சாட்சியம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவலர் ரேவதியை தொடர்ந்து சிறப்பு எஸ்.ஐ., பால்துரை, முத்துராஜ் ஆகியோர் அப்ரூவராக சாட்சியம் அளிக்க உள்ளனர். 

    11:17 (IST)02 Jul 2020

    சிபிசிஐடி அலுவலகத்தில் கைரேகை பதிவு!

    கயத்தாறு அருகே இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கைது செய்யப்பட்டார். அதனைத்தொடார்ந்து, அதிகாலையில் எஸ் ஐ பாலகிருஷ்ணன், ஏட்டு முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 4 பேரும் கைது  செய்யப்பட்டனர்.

    ஏற்கனவே நேற்று இரவு எஸ் ரகு கணேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இதனையடுத்து இன்று மதியம் 12 மணிக்கு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட நான்கு பேர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துகின்றனர். பின்பு சிறைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். தற்போது தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட 4 பேருக்கு கைரேகை பதிவு நடைப்பெற்று வருகிறது. 

    11:07 (IST)02 Jul 2020

    சிபிசிஐடி ஐஜி பேட்டி!

    எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழக அரசுக்கு நன்றி என சிபிசிஐடி ஐஜி  சங்கர் தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழப்பு தொடர்பான வழக்கில் விசாரணை தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய காவல் அதிகாரிகளான ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமைக் காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ரகுகணேஷ் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். 

    09:36 (IST)02 Jul 2020

    காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது!

    சாத்தான்குளம் வழக்கில் இதுவரை எஸ்.ஐ. ரகுகணேஷ், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகிய நான்கு காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 5-வது நபரான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கங்கைகொண்டான் செல்லும் வழியில் சிபிசிஐடி போலீசார் வழிமறித்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து ஆய்வாளர் ஸ்ரீதரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.

    sathankulam news : இந்த வழக்கின் அதிரடி திருப்பமாக சாத்தான்குளம் போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜ் உட்பட 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். இதற்கு முன்பு இருந்த கஸ்டடி மரணம் என்ற எப்ஐஆரை கொலை வழக்கு என்று மாற்றி பதிவு செய்தனர்.

    மேலும் உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மீதும் கொலை வழக்கு பதிவு செய்தனர். அதனைத்தொடர்ந்து, சாத்தான்குளம் எஸ்ஐ ரகுகணேஷ் சிபிசிஐடி போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இவரை மருத்துவ சோதனைக்கு பின் சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அதன்படி மாஜிஸ்டிரேட் முன் ரகுகணேஷ் ஆஜர்படுத்தப்பட்டார்.

    ”ரத்த வெள்ளத்தில் இருந்த ஜெயராஜ் என் மனைவியிடம் தண்ணீர் கேட்டார்”.. பெண்காவலரின் கணவர் பரபரப்பு பேட்டி!

    இந்த வழக்கில் அடுத்தடுத்த சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

    Tamilnadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment