விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள செவல்பட்டியில் ஜெய் கருப்பா பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. வெம்பக்கோட்டை சேர்ந்த கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான இந்த பட்டாசு ஆலை சென்னை உரிமம் பெற்று சுமார் 25 க்கும் மேற்பட்ட அறைகளில் 50க்கும் மேற்பட்டோர் சிறிய ரக பட்டாசுகளை தயார் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று மாலை வழக்கம் போல் பணியாளர்கள் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஒரு அறையில் மருந்துக்கலவை உராய்வினால் பட்டாசு வெடி விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. விபத்தை தொடர்ந்து உடனடியாக தொழிலாளர்கள் அனைவரும் பட்டாசு ஆலையை விட்டு தப்பி ஓடியுள்ளனர்.
அவர்கள் வெளியேறியதும் ஒரு அறை மட்டும் வெடி விபத்தினால் சிதறி தரைமட்டமாகியுள்ளது. மேலும் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு நான்கு சக்கர வாகனங்கள் தீயில் எரிந்து கருகியது. இந்த விபத்து குறித்து தீயணைப்புத் துறையினர் தகவல் அறிந்து வெம்பக்கோட்டை மற்றும் சிவகாசி ஆகிய இரு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அனைத்தனர்.விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“