சிறையில் தொடர்ந்து 3 ஆவது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள சவுக்கு சங்கரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சமூக வலைதளத்தில் நீதிமன்ற தீர்ப்பு குறித்தும், நீதிபதிகள் குறித்தும் அவதூறாக பதிவிட்டது தொடர்பாக சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறைத்தண்டனை வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
இதையும் படியுங்கள்: சென்னையில் காந்தி சிலைக்கு ஆர்.என் ரவி- ஸ்டாலின் இணைந்து மரியாதை
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் நிர்வாக காரணங்களுக்காக கடந்த 16 ஆம் தேதி கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்தநிலையில், சவுக்கு சங்கரை சிறையில் பார்வையாளர்கள் சந்திக்க ஒரு மாதத்திற்கு தடை விதித்து, கடலூர் சிறை நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மத்திய சிறையில் சவுக்கு சங்கர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
தொடர்ந்து 3 ஆவது நாளாக சவுக்கு சங்கர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சவுக்கு சங்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக சவுக்கு சங்கர் உண்ணாவிரதம் இருந்து வருவது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய அவரின் தாயார், முதல்வர் தலையிட்டு உரிய உத்தரவுகளை பிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil