காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக பிரபல யூடியூபர் மற்றும் ஊடகவியலாளர் சவுக்கு சங்கரை கோவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சவுக்கு சங்கர் காவல் உயர் அதிகாரிகள் மற்றும் மகளிர் போலீசார் குறித்து பாலியல் தொடர்பான கருத்துகளை தெரிவித்ததாகவும் அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் மீது கஞ்சா வழக்கு, குண்டர் சட்டம் என அடுத்தடுத்து வழக்குப் பதியப்பட்டது.
இந்நிலையில், சவுக்கு சங்கர் அளித்த பேட்டியை ஒளிபரப்பியதாக ரெட்ஃபிலிக்ஸ் யூடியூப் சேனலின் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டை டெல்லியில் வைத்து திருச்சி மாவட்ட தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
முன்ஜாமீன் கோரி பெலிக்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த நிலையில் இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது எனக் கூறி மறுத்து அநாகரீகமாக விவாதம் செய்த பெலிக்சை முதல் குற்றவாளியாக சேர்த்திருக்க வேண்டும் என ர் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. மேலும் பெலிக்ஸின் முன்ஜாமீன் மனு விசாரணையை நீதிமன்றம் ஒரு வார காலம் தள்ளி வைத்த நிலையில் பெலிக்ஸ் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டை போலீசார் டெல்லியில் இருந்து ரயில் மூலம் இன்று (மே 13) சென்னைக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து சென்னையில் இருந்து வேன் மூலம் பெலிக்சை திருச்சி அழைத்துச் சென்று, அங்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“