அண்மையில் சிறையில் இருந்து விடுதலையான, அரசியல் விமர்சகர், யூடியூபர் சவுக்கு சங்கர் தனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவருடைய இல்லத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
அரசியல் விமர்சகர் யூடியூபர் சவுக்கு சங்கர், ஊடகங்களிலும் யூடியூப் சேனல்களிலும் அரசியல் கருத்துகளைத் தெரிவித்து வந்தார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் குறித்து அவதூறு கருத்துகள் தெரிவித்ததாக சென்னை உயர் நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இதில், சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சவுக்கு சங்கரை விடுதலை செய்ய வேண்டும் என அவருக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சவுக்கு சங்கர், வி.சி.க தலைவர் திருமாவளவன் ஆகியோர் குரல் கொடுத்தனர்.
சவுக்கு சங்கர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைதண்டனைக்கு நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.
சவுக்கு சங்கர் விடுதலையாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பழைய நான்கு வழக்குகளில் சென்னை சைபர் க்ரைம் பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, எழும்பூர் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியதை அடுத்து ஜாமினில் விடுதலையானார்.
இதையடுத்து, சவுக்கு சங்கர் தனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவருடைய இல்லத்தில் சந்தித்து நன்றி கூறினார். சவுக்கு சங்கர் சீமானுக்கு சால்வை அணிவித்தார். சீமான் சவுக்கு சங்கருக்கு புத்தகம் வழங்கினார்.
பின்னர் இருவரும் தமிழக அரசியல், மற்றும் தி.மு.க-வில் ஸ்டாலின் குடும்பத்தினர், சபரீசன் ஆகியோர் குறித்து விவாதித்தனர். மேலும், சவுக்கு சங்கர் தனது வாட்சப் செய்திகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாகக் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"