பெண் காவலர்கள், உயர் அதிகாரிகள் குறித்து அவதூறாகப் பேசியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் மீது கோவை, திருச்சி, நீலகிரி காவல் நிலையங்களில் வெவ்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதில் சில வழக்குகளில் ஜாமீன் கிடைத்த நிலையில், வேறு வழக்குகளில் ஜாமீன் கிடைக்காததால் அவர் சிறையில் உள்ளார். இந்நிலையில் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி, முத்துராமலிங்க தேவர் பற்றி சவுக்க சங்கர் கடந்தாண்டு பேட்டி ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர் மீது முத்து என்பவர் அளித்த புகாரின் பேரில் சனிக்கிழமை அவர் கைது செய்யப்பட்டார்.
புகாருக்குப் பிறகு, சங்கர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பல பிரிவுகளின் கீழ் ஜூலை 15 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரை போலீஸார் மீண்டும் கைது செய்தனர்.
கைதைத் தொடர்ந்து, கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் அவரை கைது செய்ததற்கான ஆவணத்தை காட்டி நீதிமன்றத்தில் ஆஜர் செய்து பின்னர் அவரை மீண்டும் கோவை சிறையில் அடைத்தனர்.
முன்னதாக, இந்த குற்றச்சாட்டுகளை சவுக்கு சங்கர் மறுத்து தன் கைது, மற்றும் தன் மீதான பொய் வழக்குகளுக்கு மிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான் காரணம் எனக் குற்றம்சாட்டினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“