Advertisment

சாதி, மதம், உடலில் என்ன அணிகிறார்கள் என பார்க்காது கோர்ட்; ஜி.ஆர். சுவாமிநாதனை விமர்சித்து நீதிபதி கருத்து

நீதிபதியை வழக்கு ரீதியாக ஒருவர் சந்தித்து அவரை மனமாற்ற முயன்றாலும் கூட நீதிபதி எந்த பக்கமும் சாயாமல் நடுநிலையாக இருக்க வேண்டும். அதற்காக அவசரமாக ஒரு முடிவை எடுக்க கூடாது, என்று நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
jayachandran GR Swaminathan

இந்த நீதிமன்றம் அனைவருக்கும் நியாயமானது. இதில் சாதி, மதம் அல்லது அவர்கள் உடலில் என்ன அணிகிறார்கள் என்று பார்க்காது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

யூ டியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாய் கமலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி அடங்கிய அமர்வு, மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. 

Advertisment

நீதிபதி சுவாமிநாதன், சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். ஆனால், நீதிபதி பாலாஜி, இந்த மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்காமல் உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக் கூறி, சவுக்கு சங்கர் தாய் மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார். 

இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதை அடுத்து, வழக்கு மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. மூன்றாவது நீதிபதியாக ஜி. ஜெயச்சந்திரனை நியமித்து சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஜி. ஜெயச்சந்திரன், சமீபத்தில் சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவசர அவசரமாக உத்தரவு பிறப்பித்துள்ளார் என தெரிவித்துள்ளார். 

மேலும், சட்ட புத்தகத்தின் தொடக்கத்திலேயே இருக்கும்  “Latin maxim audi alteram partem” எனப்படும் அடிப்படை வாக்கியமே இதில் பயன்படுத்தப்படவில்லை. அதாவது, எந்தவொரு வழக்கிலும் நியாயமான விசாரணையின்றி தீர்ப்பளிக்கப்படக்கூடாது என்று அந்த வாக்கியம் கூறுகிறது. அந்த அடிப்படை வாக்கியம், இந்த வழக்கில் பயன்படுத்தப்படவில்லை. ஏனெனில், இந்த வழக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்ட அதே நாளில் விசாரிக்கப்பட்டது. இதனால், அரசு தரப்புக்கு போதுமான வாய்ப்பு, பதில் அளிக்க போதுமான நேரம் வழங்கப்படவில்லை. அரசுக்கு மிகவும் குறைவான நியாயமான வாய்ப்பு மட்டுமே வழங்கப்பட்டது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

இந்த விசாரணையில்தான், மறு தரப்பையும் முறையாக விசாரணை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் 'LATIN MAXIM AUDI ALTERAM PARTEM'தான் சட்டக் கல்லூரிகளில் முதல் பாடம், அதை கடைபிடிக்காமல் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவசர அவசரமாக உத்தரவு பிறப்பித்ததாக 3 வது நீதிபதி ஜெயச்சந்திரன் விமர்சனம் வைத்துள்ளார். 

நீதிபதி ஜி.ஆர சுவாமிநாதன் . யூடியூபர் 'சவுக்கு' சங்கர் என்ற ஏ.சங்கர் குண்டர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவில், பெஞ்ச் பார்ட்னரை (நீதிபதி பி.பி. பாலாஜி) ஆலோசிக்காமல் அவசர அவசரமாக உத்தரவுகளை பிறப்பிப்பதில் ஆர்வம் காட்டுவதன் மூலம் மாநில காவல்துறைக்கு எதிராக பாரபட்சமாக இருந்துள்ளார் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

எதிர் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய அரசுக்கு அவகாசம் அளிக்காதது மற்றும் பெஞ்ச் பார்ட்னரை கலந்தாலோசிக்காமல் அவசர அவசரமாக உத்தரவு பிறப்பிப்பதில் ஆர்வம் காட்டுவது போன்ற செயல்களை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் செய்துள்ளார். 

ஏனெனில், இந்த வழக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்ட அதே நாளில் விசாரிக்கப்பட்டது. இதனால், அரசு தரப்புக்கு போதுமான வாய்ப்பு, பதில் அளிக்க போதுமான நேரம் வழங்கப்படவில்லை. அரசுக்கு மிகவும் குறைவான நியாயமான வாய்ப்பு மட்டுமே வழங்கப்பட்டது. இது சட்ட விதிகளுக்கு எதிரானது 

நீதிபதியை வழக்கு ரீதியாக ஒருவர் சந்தித்து அவரை மனமாற்ற முயன்றாலும் கூட நீதிபதி எந்த பக்கமும் சாயாமல் நடுநிலையாக இருக்க வேண்டும். அதற்காக அவசரமாக ஒரு முடிவை எடுக்க கூடாது, என்று நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் தற்போது புதிய கருத்து ஒன்றை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி ஜெயச்சந்திரன்.தெரிவித்துள்ளார் . அதில், சில நீதிபதிகள் என்ன மாதிரியான உத்தரவுகளையும் பிறப்பிப்பார்கள். அதன்பின் அத்தகைய நீதிபதிகளுக்கு ஆதரவாக தீர்மானங்களை சில வழக்கறிஞர்கள் நிறைவேற்றுகிறார்கள். 

இந்த நீதிமன்றம் அனைவருக்கும் நியாயமானது. இதில் சாதி, மதம் அல்லது அவர்கள் உடலில் என்ன அணிகிறார்கள் என்று பார்க்காது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நீதிபதி ஜி ஜெயச்சந்திரன் நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக கருத்து சொல்லிய நிலையில் நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக சில வழக்கறிஞர்கள் தீர்மானம் வெளியிட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment