சென்னை பரங்கிமலை புனித தோமையார் மலை காவல் நிலையம் வாசலில் இன்று சவுக்கு சங்கர் மற்றும் போலீசாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சவுக்கு சங்கர், காவல்துறை அதிகாரிகளுடன் ’என் பைக்கை கொடுங்கள், என்ன என்னையும் அஜீத் மாதிரி அடிப்பீங்களா? போலீஸ் அராஜகம் மக்களுக்கும் தெரியட்டும்’ என்றும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவர் போலீசாரிடம், "வண்டி ஏன் சார் வச்சிருந்தீங்க? சொல்லுங்க சார். என்ன தப்பு பண்ணா அவன்? சரி வாங்க திருட்டு வேலை பண்ணானா. போலீஸ் பண்ற அராஜகத்தை மக்கள் தெரிஞ்சுக்கிட்டும் சார் தடுக்காதீங்க சார். நீங்க பைக் குடுங்க. என்கிட்ட பேசுறதுக்கு ஒன்னும் இல்ல. நீங்க பைக் குடுங்க. என்னன்னு டீடைல் கேட்டுருவோம் சார்" என்று ஆவேசமாக கேட்கிறார்.
மேலும், "பேசுறது கூட உங்ககிட்ட பர்மிஷன் வாங்கணுமா? அப்பறம் அஜித் மாதிரி அடிப்பீங்களா?" என்று சவுக்கு சங்கர் போலீசாரிடம் நேரடியாக கேள்வி எழுப்புகிறார். 15 நாட்களாக தீர்க்கப்படாத ஒரு பிரச்சனை குறித்து அவர் பேசுவதாகவும், "சால்வ் பண்ணக்கூடிய ப்ராப்ளம் தான் சார் பண்ணிருவோம். நீங்க 15 நாளா சால்வ் பண்ணிருக்கணும் சார்" என்றும் அந்த வீடியோவில் அவர் கூறுவது பதிவாகியுள்ளது. மேலும் போலீசார் மற்றும் சவுக்கு சங்கருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது.