Savukku Shankar | Madurai: பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாகவும், மகளிர் போலீசார் குறித்தும் பாலியல் தொடர்பான கருத்துகளை தெரிவித்ததாகவும் கூறி கோவை சைபர் கிரைம் போலீசில், சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கரை தேனியில் வைத்து கடந்த 4 ஆம் தேதி கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, தேனியில் கைது சவுக்கு சங்கர் செய்யப்பட்ட போது, அவர் 3 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது. சவுக்கு சங்கருக்கு கஞ்சா வழங்கியதாக ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கில் மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் விசாரணைக்கு ஆஜரானார்.
இந்த நிலையில், காரில் `கஞ்சா' வைத்திருந்த வழக்கில் கைதான சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“