பெண் காவலர்கள், காவல் உயர் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக யூடியூர், பத்திரிகையாளரான சவுக்கு சங்கரை கோவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதைத் தொடர்ந்து அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார். சவுக்கு சங்கர் மீது சென்னை போலீசார் பதிந்த குண்டர் தடுப்பு சட்ட உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. தொடர்ந்து, தேனி போலீசார் அவர் மீது 2-வது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.
இதை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாயார் கமலா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வுக்கு சங்கரின் தாயார் தரப்பில், பாலாஜி ஸ்ரீநிவாசன், கே.கவுதம் குமார் மற்றும் ஹர்ஷா திரிபாதி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். தொடர்ந்து, வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“