பிரபல அரசியல் விமர்சகராக வலம் வருபவர் சவுக்கு சங்கர். முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசின் அதிகாரிகள், பல்வேறு துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், அமைச்சகர்கள் உள்ளிட்டோர் மீது அவர் தொடர் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. அவர் வைக்கும் விமர்சனம் சில சமயங்களில் பெரும் சர்ச்சை ஆகி விடுகிறது.
சவுக்கு சங்கரை பெண் காவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கடந்த மே மாதம் போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக பல வழக்குகள் தமிழகத்தின் பல்லவேறு இடங்களில் பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் போடப்பட்டது. அதனை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.
இதன்பிறகு, தமிழக போலீசார் 2-வது குண்டாஸ் வழக்கு போடட்டது. அதனை எதிர்த்து அவரது தயார் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கியது. மேலும், மற்ற அனைத்து வழக்கில் இருந்தும் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
இதனையடுத்து, கோவை சிறையில் இருந்து வெளியில் வந்த சவுக்கு சங்கர் மீண்டும் அதே வீரியத்துடன் செயல்பட போவதாக சூளுரைத்தார். அதன்படி, தற்போது ஊடகங்களுக்கும், யூடியூப் சேனல்களுக்கும் அவர் வழக்கம் போல் பேட்டி அளித்து வருகிறார். எப்போதும் போல் பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்து வருகிறார்.
இந்த நிலையில், சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அவர் தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவதூறு வழக்கில் சவுக்கு சங்கர் கோவை சிறையில் இருந்த போது, தனது கை போலீசாரால் உடைக்கப்பட்டது என்றும், சிறையில் பல்வேறு துன்பங்களை அனுபவித்ததாகவும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“