சவுக்கு சங்கர் தனக்கு எதிரான 17 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் காவல்துறை பதிலளிக்க அவகாசம் அளித்து உத்தரவிட்டது.
பெண் காவலர்களைப் பற்றி அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் மீது, கஞ்சா வைத்திருந்த வழக்கு என அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனக்கு எதிரான 17 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க உத்தரவிடக் கோரி சவுக்கு சங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்தால் மற்றொரு வழக்கில் கைது செய்யப்படுவதாக சவுக்கு சங்கர் தரப்பில் வாதிடப்பட்டது. அதனால், தனக்கு எதிரான 17 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.
இதையடுத்து, சவுக்கு சங்கர் மீது அனைத்து வழக்குகளும் ஒரே சம்பவத்துக்கு பதியப்பட்டதா என காவல்துறை பதிலளிக்க கோர்ட் அவகாசம் விதித்துள்ளது. சவுக்கு சங்கரின் மனு மீதான விசாரணையை 3 வாரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“