/indian-express-tamil/media/media_files/2025/05/06/hbUrpZ0CLAaOUaF7hfdo.jpg)
, “சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த வழக்கின் விசாரணையை நியாயமான முறையில் நடத்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு துளியும் இல்லை.” என்று சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
தனது வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டது குறித்த வழக்கில், சவுக்கு சங்கர் சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் சாட்சியம் அளித்த நிலையில், “சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த வழக்கின் விசாரணையை நியாயமான முறையில் நடத்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு துளியும் இல்லை.” என்று திங்கள்கிழமை (06.05.2025) தெரிவித்துள்ளார்.
சவுக்கு சங்கர் கூறுகையில், “29.03.2025 அன்று என் வீட்டில் நடைபெற்ற மோசமான அநாகரிகமான ஈவிறக்கமற்ற அந்த தாக்குதல் குறித்து சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் இன்று என்னை சாட்சியம் அளிப்பதற்காக வரச் சொல்லி இருந்தனர். அதன் அடிப்படையில் இன்று இந்த வழக்கின் புலனாய்வு அதிகாரியிடம் நான் எனது சாட்சியத்தை அளித்தேன். வீட்டில் என்ன நடந்தது இந்த தாக்குதலின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து எழுத்துப்பூர்வமான எனது வாக்குமூலத்தை அளித்தேன். கூடுதலாக தமிழகத்தின் சி.எம்.டி.ஏ மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பேசிய ஒரு உரையாடலை சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் அளித்திருக்கிறேன். இப்போது இந்த ஆவணங்கள் நான் கொடுத்த இந்த ஆதாரங்கள் அத்தனையையும் சரி செய்து போலீசார் அப்படியே எனது வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டனர். ஆனாலும், சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த வழக்கின் விசாரணையை நியாயமான முறையில் நடத்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு துளியும் இல்லை.
மார்ச் 2025-ல் என் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான திருமதி வாணிஸ்ரீ விஜயகுமார்தான் என் வீட்டில் நடந்த அந்த தாக்குதலை தலைமை வகித்து நடத்தி பேஸ்புக்ல நேரலை செய்து அந்த தாக்குதலை நடத்தி பெருமையோடு பதிவு செய்திருந்தார். அவரது முன்ஜாமீனை சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து ஒரு வார காலம் ஆகிவிட்டது. இதுவரை சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வாணிஸ்ரீ விஜயகுமாரை இதுவரை கைது செய்யவில்லை. என் வீட்டிற்கு வந்திருந்து அந்த தாக்குதலில் பங்கு பெற்று அந்த வீடியோக்களில் எல்லாம் பதிவான முக்கிய குற்றவாளிகள் இன்னமும் காங்கிரஸ் கட்சியின் கூட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
முக்கிய குற்றவாளியாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக அறநிலை துறை மற்றும் சி.எம்.டி.ஏ அமைச்சர் சேகர் பாபு முக்கிய குற்றவாளிகளாக இருக்கும் காரணத்தால் தமிழகத்தின் உள்துறை அமைச்சராக இருக்கக்கூடிய ஸ்டாலின் கீழ் பணியாற்றும் சி.பி.சி.ஐ.டி காவல்துறை இந்த வழக்கின் புலனாய்வை சரிவர செய்யும் என்று நம்பிக்கை எனக்கு துளியும் இல்லை. நீதிமன்ற தீர்ப்பின் நகல் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. அந்த நகல் கிடைக்கப் பட்டவுடன் உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்று இருக்கிறேன்.
அமைச்சர் சேகர்பாபு பேசிய ஒரு உரையாடலை சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் அளித்திருக்கிறேன். இப்போது இந்த ஆவணங்கள் நான் கொடுத்த இந்த ஆதாரங்கள் அத்தனையையும் சி.பி.சி.ஐ.டி போலீசார் அப்படியே எனது வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டனர். ஆனாலும், சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த வழக்கின் விசாரணையை நியாயமான முறையில் நடத்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு துளியும் இல்லை.” என்று சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.