சிறையில் சித்ரவதை; பரிசோதித்த மருத்துவ குழு: சவுக்கு சங்கர் வழக்கறிஞர் பேட்டி

"காவல்துறை அராஜகம், சிறையில் சித்ரவதைக்கு ஆளாக்கப்படுவதை தான் இந்த வழக்கில் முக்கியமாக பார்க்க வேண்டும்." என்று வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

"காவல்துறை அராஜகம், சிறையில் சித்ரவதைக்கு ஆளாக்கப்படுவதை தான் இந்த வழக்கில் முக்கியமாக பார்க்க வேண்டும்." என்று வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
Savukku Shankar Torture in Jail Medical Team examine Advocate Interview Tamil News

"அரசுக்கு எதிராக பேசியதன் காரணமாக காவல்துறை மூலமாக பழி வாங்கப்படுவதாக சவுக்கு சங்கர் எண்ணுகிறார்" என்று வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.

Savukku Shankar | Coimbatore:கோவையில் சவுக்கு சங்கர் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அவர் கூறியிருப்பது பின்வருமாறு:- 

Advertisment

சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்பட்டது தொடர்பாக 4-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு அடிப்படையில் மாவட்ட சட்டப் பணிகள் சார்பில் 3 வழக்கறிஞர் 2 மருத்துவர்களுடன் சிறையில் நேரடியாக சவுக்கு சங்கரை சந்தித்து பார்வையிட்டுள்ளனர். 

நேற்று முன் தினம் என்ன நிலைமையில் இருந்தாரோ அதே நிலையில் தான் நேற்றும் காயங்களுடன் உள்ளார். நேற்று முன் தினம் வரை வலி மாத்திரைகள் கொடுக்கப்பட்ட நிலையில், நீர் ஆகாரமாக நேற்று வரை  கொடுத்து வருகின்றனர். மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளான கை உடைக்கப்பட்டது, காயங்கள் தொடர்பாக கேட்டறிந்துள்ளனர். 

கோவை மத்திய சிறை நிர்வாகம் தரப்பில் கொடுக்கப்பட்ட மருத்துவ அறிக்கையில் சவுக்கு சங்கருக்கு கூடுதல் மருத்துவம் தேவைப்படுகிறது என்று குறிப்பிட்டும் தேவையான மருத்துவம் மேற்கொள்ளப்படவில்லை. மேற்கொள்ளப்பட்ட மருத்துவ உதவி செய்யவில்லை என்று நேற்று மனு தாக்கல் செய்து இன்று மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சார்பில் நேரடியாக ஆய்வு செய்துள்ள நிலையில், சென்னையில் வழங்கப்பட்டுள்ள சிறைத்துறை அறிக்கை ஆச்சரியம் அளிக்கிறது

Advertisment
Advertisements

சனிக்கிழமை நீதிபதி முன்னிலையில் கைது குறிப்பாணையில் கையெழுத்திட்ட சவுக்கு சங்கர், இன்று காலை தேனி காவல்துறையினர் கைது குறிப்பாணை கொடுக்கப்பட்ட நகலில் கைரேகை இட்டுள்ளார் சவுக்கு சங்கர். ஏன் அவர் கைரேகை இட்டுள்ளார்?

கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் காவல் மனு மீதான நேற்று முன் தினம் விசாரணை வந்த நிலையில், சவுக்கு சங்கர் தன் மீதான தாக்குதல் தொடர்பாக நீதிபதியிடம் தெரிவிக்க வாய்ப்புள்ளதால் தான் நேற்றைய  விசாரணை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த நிமிடம் வரை எக்ஸ்ரே எடுக்கவில்லை. 

சிறையில் நேரடியாக ஆய்வு செய்த சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிக்கை பெற்று, சவுக்கு சங்கருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நாளை கேட்க உள்ளோம். நாங்கள் எக்ஸ்ரே எடுக்க சொல்லி தான் கேட்கிறோம். 

சவுக்கு சங்கருக்காக மட்டும் இந்த முயற்சி இல்லை, நாள்தோறும் காவலர்களால் மனித உரிமை மீறல்கள், லாக் அப் தாக்குதல்கள் நடந்த வண்ணம் உள்ளது, அதை சரி செய்யவே இந்த முயற்சி போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். மாநில மற்றும் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் செல்வோம், ஆனால் முதலில் மருத்துவ உதவி அவசியம், 2 நாட்கள் போராடியோம் ஒரு எக்ஸ்ரே எடுக்க முடியவில்லை, 

அரசுக்கு எதிராக பேசியதன் காரணமாக காவல்துறை மூலமாக பழி வாங்கப்படுவதாக சவுக்கு சங்கர் எண்ணுகிறார். மருத்துவ உதவி செய்து அவர் உயிருடன் இருந்தால் தான் காவல்துறை வழக்கு போட முடியும் என்று சொல்லி கொள்கிறேன். காவல்துறை அராஜகம், சிறையில் சித்ரவதைக்கு ஆளாக்கப்படுவதை தான் இந்த வழக்கில் முக்கியமாக பார்க்க வேண்டும். சிறைத்துறை அறிக்கை தவறானது என்று நேற்று சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிக்கை இன்று  நிரூபிக்கும் என நம்புகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Coimbatore Savukku Shankar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: