பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை உயர் அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து
அவதூறாக பேசியதாக கடந்த மே 4-ம் தேதி தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தேனியில் கைது செய்யும் போது அவர் காரில் கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர், அவரது உதவியாளர்கள் ராம்பிரபு, ராஜரத்தினம் மற்றும் கஞ்சா கொடுத்ததாக மகேந்திரன் என்பவர் மீதும் தேனி பழனி செட்டிபட்டி போலீசார் கஞ்சா வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து கஞ்சா வழக்கில் மே 7-ம் தேதி சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டார். மறுநாள் (மே.8) மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி சவுக்கு சங்கர் தரப்பில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இன்று (மே 30) இந்த மனுவை சவுக்கு சங்கர் திடீரென திரும்பப் பெற்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“