பெண் காவலர்கள் அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி குழித்துறை குற்றவியல் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் குறித்து அவதூறாகப் பேசியதாக யுடியூபர் சவுக்கு சங்கர் கடந்த மே 5ம் தேதி கோவை சைபர் கிரைம் போலிசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய ரெட்பிக்ஸ் யூடியூபர் சேனலின் நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டு, திருச்சி மத்தியச் சிறையில் இருந்து ஜாமினில் நேற்று விடுவிக்கப்பட்டார்.
தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரியில் கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ள கடைசி ஊர் களியக்காவிளை ஆகும். யூ டியூப்பர் சவுக்கு சங்கர் பெண் காவலர்களையும் பெண் உதவி ஆய்வாளர்களையும் ரெட் பிக்ஸ் சேனலில் தரக்குறைவாக விமர்சனம் செய்தது சம்பந்தமாக, 06.05.2024 ம் தேதி களியக்காவிளை காவல் ஆய்வாளர் சுப்புலட்சுமி புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் அவரை குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக நேற்று 07.08.2024ம் தேதி பெருநகர சென்னை காவல், மவுண்ட் ஆயுதப்படை-II போலீசார் வழிக்காவலில் அழைத்துவரப்பட்டு இன்று 08.08.2024 ம் தேதி அதிகாலை 02.30 மணியளவில் நாகர்கோயில் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளர். இந்நிலையில் அவர் இன்று காலை 10.00 மணி அளவில் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பெண் காவலர்கள் அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி குழித்துறை குற்றவியல் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சவுக்கு சங்கருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கியதை சுட்டிகாட்டி ஜாமீன் தரப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“