அனுமதி பெறாமல் எஸ்.பி.பி குரலை ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.பி சரண் தெங்கு பட தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தெலுங்கு படமான கீடா கோலா படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் குரல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது குரலை பயன்படுத்த எந்த அனுமதியும் பெறவில்லை என்று எஸ்.பி சரண் தெரிவித்துள்ளார்.
“ அப்பாவின் மறைவுக்கு பிறகு தொழில்நுட்பம் மூலம் அவரது குரல் பயன்படுத்தப்படுவது மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால் அதை எங்களிடம் அனுமதி பெறாமல் செய்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
தெலுங்கு இசையமைப்பாளர் விவேக் சாகர் கொடுத்த பேட்டியில், இதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் இது தொடர்பாக சமந்தபட்டவர்கள் மனிப்பு கேட்க வேண்டும். மேலும் நஷ்ட ஈடு மற்றும் ராயல்டி வழங்க வேண்டும் என்று எஸ்.பி.சரண் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“