SBI FASTag Fee, KYC,Recharge: சுங்கச் சாவடிகளில் வரிசையில் வாகனங்கள் அணிவகுப்பதை தவிர்க்கும் வகையிலான திட்டம் தான் ஃபாஸ்ட் டேக். இது ரேடியோ அலைக்கற்றை மூலம் இயங்கும் சிறிய ஸ்டிக்கராகும். தானியங்கி சுங்க கட்டணம் வசூலிக்கும் திட்டம் என்றழைக்கப்படும் ஃபாஸ்ட் டேக் திட்டமானது வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
Advertisment
ஃபாஸ்ட் டேக் திட்டத்தின் கீழ் வாகனத்தின் விபரம், உரிமையாளர் பெயர், ஓட்டுநர் உரிமம், ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் எல்லாம் பதிவேற்றம் செய்யப்படும். வங்கிக் கணக்குடன் ஃபாஸ்ட் டேக் கார்டை இணைத்துக் கொண்டால் பணம் தானாக வசூலிக்கப்படும். இதற்காக 22 வங்கிகளுடன் தேசிய நெடுஞ்சாலைத்துறை இணைந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.
ஃபாஸ்ட் டேக் முறையில் இணைந்தோருக்காக சுங்கச்சாவடியில் பிரத்யேக வழியும் உருவாக்கப்படும். இதனை பயன்படுத்தி வாகன ஓட்டிகள் விரைவாக செல்ல முடியும். வாகனத்தின் கண்ணாடியில் ஃபாஸ்ட் டேக் கார்டை பொருத்தினால் போதும். வாகனமானது சுங்கச் சாவடியை கடக்கும் போது அடையாளத்தை தானாக கண்டறிந்து பணத்தை வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளும்.
Advertisment
Advertisements
இதனால் வாகன ஓட்டிகள் சுங்கச் சாவடிகளில் பல மணி நேரம் காத்து நிற்கும் நிலை இனி இருக்காது.
எஸ்பிஐ வங்கியும் FASTag-ஐ வழங்குகிறது. அதை எப்படி வாங்குவது என்பது குறித்து இங்கே பார்ப்போம்,
SBI FASTag கட்டணம்
SBI FASTag வழங்கல் கட்டணம் ரூ.100. வாகனத்தை பொறுத்து மற்ற விலை நிலவரங்கள் மாறும்.
கார்/ஜீப்/வேன்/டாட்டா ஏஸ் மற்றும் கமர்ஷியல் வாகனங்கள் - பாதுகாப்பு கட்டணம் ரூ.200
லைட் கமர்ஷியன் வாகனம் - பாதுகாப்பு கட்டணம் ரூ.300
மூன்று ஆக்ஸில் கமர்ஷியல் வாகனம் - பாதுகாப்பு கட்டணம் ரூ.400
பேருந்து/டிரக் - பாதுகாப்பு கட்டணம் ரூ.400
4-6 ஆக்ஸில் வாகனம் - பாதுகாப்பு கட்டணம் ரூ.400
7 அல்லது அதற்கு மேற்பட்ட ஆக்ஸில் வாகனம் - பாதுகாப்பு கட்டணம் ரூ.400
Heavy Construction Machinery (HCM) / Earth Moving Equipment (EME) - பாதுகாப்பு கட்டணம் ரூ.400
SBI FASTag எப்படி வாங்குவது, எப்படி ரீசார்ஜ் செய்வது?
அருகில் உள்ள எஸ்பிஐ வங்கிக்கு செல்லவும்
உங்கள் விண்ணப்ப ஆவணத்தை KYC ஆவணங்களுடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
KYC ஆவணங்கள் என்னென்ன?
Limited KYC வாடிக்கையாளர்கள் கணக்கு : வாகனத்தின் RC நகல், ஐடி சான்று, முகவரி சான்று, வாடிக்கையாளரின் புகைப்படம்.
Full KYC வாடிக்கையாளர்கள் கணக்கு: வாகனத்தின் RC நகல், ஐடி சான்று, முகவரி சான்று, வாடிக்கையாளரின் புகைப்படம்.
உங்கள் மொபைல் எண், பாஸ்வேர்டு, Captcha Code ஆகியவற்றை பயன்படுத்தி லாக் இன் செய்யவும்.
உங்கள் கணக்கு/வாகனம் ( உங்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனம் இருக்கும் பட்சத்தில்) தேர்வு செய்யுங்கள், ரீசார்ஜ் செய்ய வேண்டிய தொகையை தேர்வு செய்து, பிறகு, நீங்கள் விரும்பும் ரீசார்ஜ் ஆப்ஷனை தேர்வு செய்து FASTag கணக்கை ரீசார்ஜ் செய்யவும்.