நீலகிரியில் சீகூர் பள்ளத்தாக்கு, சோலூர், மசினகுடி, உள்ளிட்ட சில பகுதிகளில் யானை அதிகம் நடமாடும் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாக ரிசார்ட்கள், ஹோட்டல்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அப்போது, யானைகள் வழித்தடப் பகுதிகளை ஆக்கிரமிப்பதற்குத் தடை விதித்தும், அப்பகுதியில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சென்னை உயா்நீதிமன்றம் 2019ல் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து ஹோட்டல் உரிமையாளர்கள் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் விரைந்து செயல்பட வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக நீலகிரி ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா பல்வேறு பணிகளை செய்து வருவதால் மறு உத்தரவு வரும்வரை இன்னசன்ட் திவ்யாவை வேறு எங்கும் இடமாற்றம் செய்யக் கூடாது என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், நிர்வாக ரீதியில் அவசர மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்ததையடுத்து, நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil