அதிமுக பொதுக்குழு நடத்த தடை விதிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், பொதுக்குழு நடத்த தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும் ஏதேனும் விதி மீறல் நடந்தால் நீதிமன்றத்தை நாடலாம் எனத் தெரிவித்தது.
இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீடு மனுவில், ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் கட்சி விதிகள் காற்றில் பறக்கப்படவிடப்பட்டுள்ளன.
கட்சியின் சட்ட விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆகவே பொதுக்குழு நடத்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு வெள்ளிக்கிழமை (ஜூலை 29) விசாரணைக்கு வந்தது. முன்னதாக அதிமுக தலைமை கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் எங்களை கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக் கூடாது எனக் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்வி ரமணா அமர்வு முன்பு இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு கடுமையான வாதங்களை முன்வைத்தனர்.
அப்போது, இருவரும் மீண்டும் ஒன்றிணைய வாய்ப்புகள் உள்ளதா? என நீதிபிதி கேள்வியெழுப்பினார்கள்.
எடப்பாடி பழனிசாமி தரப்ப சமரசத்துக்கு வாய்ப்பு இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுவரை எத்தனை சிவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன என கேட்டார். தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பு, அதிமுக கட்சியில் இருந்து என்னை நீக்கி கடுமையான முடிவுகளை எடுத்துள்ளனர். கடந்த கால நிலையை தொடர வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
இந்த நிலையில் அனைத்து தரப்பு விவாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக எந்தக் கருத்தையும் நாங்கள் பதிவு செய்யவில்லை. இந்த வழக்கில் 3 வாரங்களுக்குள் உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கும். அதுவரை தற்போதைய நிலையை தொடர வேண்டும். அதுவரை சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி விசாரணையை போதுமானது” எனக் கூறி வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தார்.