பாடகர் டி.எம். கிருஷ்ணா தன்னை, சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது பெற்றவராக முன்னிறுத்தக் கூடாது எனவும், அந்த விருதை பயன்படுத்தக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. எம்.எஸ். சுப்புலட்மியின் பேரன் சீனிவாசன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: SC restrains musician T M Krishna from projecting himself as recipient of M S Subbulakshmi award
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மியூஸிக் அகாடெமி, டி.எம். கிருஷ்ணாவிற்கு இந்த விருதை வழங்கியது. முன்னதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒற்றை நீதிபதி அளித்த உத்தரவின் பேரில், இந்த விருது வழங்கப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், டி.எம். கிருஷ்ணாவிற்கு விருது வழங்கப்பட்டதை எதிர்த்து, எம்.எஸ். சுப்புலட்சிமியின் பேரன் சீனிவாசன், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். எம்.எஸ். சுப்புலட்சுமி குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துகள் கூறியதால், இந்த விருதை வழங்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய் மற்றும் எஸ்.வி.என்.பதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எம்.எஸ். சுப்புலட்சுமி குறித்து டி.எம். கிருஷ்ணா எழுதிய கட்டுரைகள் மரியாதையை வெளிப்படுத்தும் விதமாக இருந்தாலும், அதன் வார்த்தைகள் சரியாக இல்லை எனக் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து, டி.எம். கிருஷ்ணா அந்த விருதை பெற்றவராக கருதக் கூடாது எனவும், சங்கீத கலாநிதி எம்.எஸ். சுப்புலட்சுமியின் விருது பெற்றவராக டி.எம். கிருஷ்ணா தன்னை முன்னிறுத்திக் கொள்ளக் கூடாது எனவும் இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டது. எனினும், டி.எம். கிருஷ்ணாவின் இசை திறமையை கருத்திற்கொண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு எனக் கருதக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“