Advertisment

தமிழக ஆளுனர் ரவி 3 ஆண்டுகளாக என்ன செய்தார்? உச்ச நீதிமன்றம் கேள்வி

“இந்த மசோதாக்கள் ஜனவரி 2020 முதல் நிலுவையில் உள்ளன. நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிய பிறகு ஆளுநர் முடிவெடுத்துள்ளார். ஆளுநர் மூன்று ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? உச்சநீதிமன்றத்தை அணுகும் வரை ஆளுநர் ஏன் காத்திருக்க வேண்டும்?” என தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கேள்வி எழுப்பினார்.

author-image
WebDesk
New Update
SC RN Ravi

ஆளுநர் 3 ஆண்டுகளாக என்ன செய்துகொண்டிருந்தார்? மசோதக்களை தாமதம் செய்த ஆர்.என். ரவிக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதைக் கவனத்தில் கொண்ட உச்ச நீதிமன்றாம் ஆளுநர்களின் அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்பட்ட அரசியலமைப்பு செயல்பாடுகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது என்பது பிரச்சினை என்று கூறியது.

Advertisment

மேலும், “இந்த மசோதாக்கள் ஜனவரி 2020 முதல் நிலுவையில் உள்ளன. நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிய பிறகு ஆளுநர் முடிவெடுத்துள்ளார். ஆளுநர் மூன்று ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? உச்சநீதிமன்றத்தை அணுகும் வரை ஆளுநர் ஏன் காத்திருக்க வேண்டும்?” என தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிப்பதில் காலதாமதம் செய்ததாக தமிழக அரசு தொடர்ந்த மனு மீதான விசாரணையை டிசம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்கள் ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டதையடுத்து, மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் செய்த கால தாமதம் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

ஆளுநர் மாளிகை அலுவலகம் சார்பில் அட்டர்னி ஜெனரல் (ஏஜி) ஆர்.வெங்கடரமணி ஆஜரானார். தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஜே.பி.பார்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, “மீண்டும் நிறைவேற்றப்பட்டு மசோதாக்கள் குறித்து ஆளுநர் முடிவெடுப்பதற்காக நாம் காத்திருப்போம். அதுவரை விசாரணையை ஒத்திவைபோம்.” என்று கூறினர்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதைக் கவனத்தில் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, ஆளுநர்களின் அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்பட்ட அரசியலமைப்பு செயல்பாடுகளை நிறைவேற்றுவதில் தாமதம் உள்ளது  என்பது பிரச்சினை என்று கூறியது. 

ஜனவரி 2020 முதல் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் காலதாமதம் செய்வது குறித்த கவலைகளை எழுப்பி, அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணியிடம் தலைமை நீதிபதி சந்திரசூட் கேள்வி எழுப்பினார். நவம்பர் 10-ம் தேதி அன்று நீதிமன்றத்தின் நோட்டீசுக்குப் பின் நேரம் குறித்த சந்தேகங்களை எழுப்பினார்.

“இந்த மசோதாக்கள் ஜனவரி 2020 முதல் நிலுவையில் உள்ளன. நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிய பிறகு ஆளுநர் முடிவெடுத்துள்ளார். ஆளுநர் மூன்று ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? உச்சநீதிமன்றத்தை அணுகும் வரை ஆளுநர் ஏன் காத்திருக்க வேண்டும்?” என தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கேள்வி எழுப்பினார்.

தற்போதைய கவர்னர் நவம்பர் 18, 2021-ம் தேதி பொறுப்பேற்றார், பல மசோதாக்களில் பல சிக்கல்கள் இருக்கிறது எனபதால் இந்த கால தாமதத்தை ஆளுநருக்குக் காரணமாகக் கூற முடியாது என்றும் அட்டர்னி ஜெனரல் வாதத்துக்கு உச்ச நீதிமன்ற அமர்வு கூறியது.

தமிழ்நாடு அரசு நடத்தும் பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநரின் அதிகாரங்களைப் பறிக்கும் மசோதாக்களில் ஒன்றைப் பற்றி மூத்த வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றியுள்ளதால், தற்போது 5 மசோதாக்கள் மட்டுமே ஆளுநரிடம் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளதாக உச்ச நீதிமன்றம் கூறியது.

“மசோதாக்கல் மீண்டும் நிறைவேற்றப்பட்டவுடன், அந்த மசோதாக்கள் நிதி மசோதாவின் அதே நிலைப்பாட்டில் உள்ளன” என்று உச்ச நீதிமன்றம் அமர்வு கூறியது,  “மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதாக்கள் குறித்து ஆளுநர் புதிய முடிவுகளை எடுக்கட்டும்” என்று கூறினார்.

அரசியலமைப்பின் 200 வது பிரிவைக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்ற அமர்வு, ஆளுநர்கள் ஒப்புதல் வழங்கலாம்/நிறுத்தலாம் அல்லது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு மசோதாவை அனுப்பி வைக்கலாம் என்றும் அவர் மசோதாவை சபையின் மறுபரிசீலனைக்காக திருப்பி அனுப்பலாம் என்றும் கூறியது.

மசோதாக்களை மீண்டும் சட்டசபைக்கோ அல்லது குடியரசுத் தலைவருக்கோ அனுப்பாமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பத என்று கேட்டதுடன், அது பிரச்சினையைப் பிரதிபலிக்கும் என்றும் உச்ச நீதிமன்ற அமர்வு கூறியது.

ஆளுநர் ஆர்.என். ரவி 10 மசோதாக்களை அனுப்பிய சில நாட்களுக்குப் பிறகு, சனிக்கிழமை (நவம்பர் 18) கூடிய தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தில் 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. ஆளுநர் ரவி நவம்பர் 13-ம் தேதி ரவி திருப்பி அனுப்பியதை அடுத்து சட்டம், விவசாயம் மற்றும் உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு சட்டப்பேர்வையால் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தமிழக ஆளுநர் தாமதம் செய்தது  “தீவிரமான கவலைக்குரிய விஷயம்” என்று நவம்பர் 10-ம் தேதி வழக்கு விசாரணையின் போது கூறிய உச்ச நீதிமன்றம், ராஜ் பவன் 12 மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டிய மாநில அரசின் மனு மீது மத்திய அரசிடம் பதில் கேட்டது. 

இந்த வழக்கு தொடர்பாக, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம், இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு அட்டர்னி ஜெனரல் அல்லது சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராக வேண்டும் என்று கூறியது.

மேலும், “மனுவில் எழுப்பப்பட்டுள்ள விஷயங்கள் தீவிரமான கவலையை எழுப்புகின்றன. இந்த நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்ட அட்டவணைப்படுத்தப்பட்ட அறிக்கைகளின்படி, 200வது பிரிவின் கீழ் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட 12 மசோதாக்கள் இல்லை என்று தெரிகிறது. வழக்கு தொடர அனுமதி வழங்குதல், கைதிகளை முன்கூட்டியே விடுவிப்பதற்கான முன்மொழிவுகள் மற்றும் பொதுப்பணித்துறை ஆணைக்குழு உறுப்பினர்களை நியமித்தல் போன்ற பிற விஷயங்கள் நிலுவையில் உள்ளன” என்று உச்சநீதிமன்றம் கூறியது.

“ஆளுநர் ஆணைகளில் கையொப்பமிடாமல், நாள்தோறும் கோப்புகள், பணி நியமன ஆணைகள், பணி நியமன ஆணைகளுக்கு ஒப்புதல் அளித்தல், ஊழலில் ஈடுபட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கு விசாரணைக்கு ஒப்புதல் வழங்குதல், உச்ச நீதிமன்றத்தால் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது உள்ளிட்ட மசோதாக்கள் தமிழக சட்டப்பேவையில்  நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆளுநர் சட்டப்பேரவை மற்றும் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் முடக்கி, அரசு நிர்வாகத்துக்கு ஒத்துழைக்காமல், விரோதப் போக்கை உருவாக்குகிறது” என தமிழக அரசு மனுவில் குற்றம்சாட்டியுள்ளது.

“தமிழ்நாடு ஆளுநர்/முதல் பிரதிவாதியின் அரசியல் சாசன ஆணையின் செயலற்ற தன்மை, புறக்கணிப்பு, தாமதம் மற்றும் இணங்கத் தவறுதல், தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு அவரது கையொப்பத்திற்காக மாநில அரசு அனுப்பிய கோப்புகள், அவருக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களின் பரிசீலனை செய்யாதவை மற்றும் ஒப்புதல் அளிக்காதவை மற்றும் பரிசீலிக்கப்படாதவை என்று அறிவிக்க வேண்டும். இது அரசு ஆணைகள் மற்றும் கொள்கைகள் அரசியலமைப்பிற்கு முரணானது, சட்டவிரோதமானது, தன்னிச்சையானது, நியாயமற்றது, மேலும் தவறாக அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார்” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Supreme Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment