Udhayanidhi Stalin | Supreme Court Of India | சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்ற தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. மேலும், பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, “உதயநிதி ஸ்டாலின் ஒரு அமைச்சர் என்றும், அவரது கருத்துக்கு என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை அறிய வேண்டும் என்றும்” நீதிபதிகள் கூறினர்.
இது தொடர்பாக நீதிபதிகள் அமர்வு, “அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 19(1)(a) இன் கீழ் உங்கள் உரிமையை நீங்கள் தவறாகப் பயன்படுத்துகிறீர்கள்.
நீங்கள் சட்டப்பிரிவு 25ன் கீழ் உங்களின் உரிமையை துஷ்பிரயோகம் செய்கிறீர்கள். இப்போது நீங்கள் சட்டப்பிரிவு 32ன் கீழ் (உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய) உங்கள் உரிமையைப் பயன்படுத்துகிறீர்களா?
நீங்கள் சொன்னதின் விளைவுகள் உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் சாமானியர் அல்ல. நீங்கள் மந்திரி. பின்விளைவுகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்” என்றனர்.
இந்த வழக்கு மார்ச் 15ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் மகனான உதயநிதி ஸ்டாலின், 2023ஆம் ஆண்டு செப்டம்பரில் சென்னையில, சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டார்.
அப்போது, “சனாதன தர்மம் சமூக நீதிக்கும் சமத்துவத்துக்கும் எதிரானது என்றும் கொசுவை போல் அதை ஒழிக்க வேண்டும் என்றும் கூறினார் என்பது நினைவு கூரத்தக்கது.
ஆங்கிலத்தில் வாசிக்க : SC rebukes Tamil Nadu Minister Udhayanidhi Stalin over his ‘eradicate Sanatan Dharma’ remark
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“