scorecardresearch

தமிழ்நாட்டில் பிராமணர் அல்லாத அர்ச்சகர்கள் நியமனம்: திமுக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்த மனு நீதிபதி ஹேமந்த் குப்தா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

Tamil Nadu Government appointing non-Brahmin priests
உச்ச நீதிமன்றம்

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் பிராமணர் அல்லாத அர்ச்சர்கள் நியமிக்கப்பட்ட விவகாரத்தில் திமுக அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் பிராமணர் அல்லாத அர்ச்சகர்கள் நியமனத்துக்கு எதிராக பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை திங்கள்கிழமை (ஆகஸ்ட் 29) விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த மனு நீதிபதி ஹேமந்த் குப்தா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது 2012ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றுடன் இந்த மனுவும் இணைக்கப்பட்டது. முன்னதாக, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பல்வேறு கோயில்களில் பிராமணர் அல்லாதவர்களை அர்ச்சகர்களாக நியமித்து உத்தரவு பிறப்பித்திருந்தார்.
மாநிலத்தின் இந்து சமய அறநிலையத் துறை 208 அர்ச்சகர்களுக்கு பணி நியமனக் கடிதங்களை வழங்கியது.

இந்த உத்தரவுக்கு பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இடைக்காலத் தடை கோரினார்.

அந்த மனுவில் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகர்களன இவர்கள் விதித்துள்ள உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். மேலும் பிராமணர்களை கோயில்களில் இருந்து வெளியேற்றும் முயற்சி எனவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Sc seeks response from tamil nadu on government appointing non brahmin priests