Advertisment

வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் மரணம்: சி.பி.சி.ஐ.டி-க்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு

சதீஷ்குமார் மரணம் குறித்து முதலாவதாக விசாரித்த சி.பி.ஐ அதனை தற்கொலை என முடிவு செய்தது. ஆனால், சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கொலை என நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்

author-image
WebDesk
New Update
வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் மரணம்: சி.பி.சி.ஐ.டி-க்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு

2011ல் மனித உரிமை வழக்கறிஞரின் மகன் மரணம் தொடர்பான விவகாரத்தில் கடந்த ஒரு வருடமாக மேற்கொண்ட விசாரணையின் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை சிபிசிஐடி போலீசாருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் சதீஷ்குமார்(24), கடந்த 2011ல் காலமானார். காவல் துறைக்கு எதிராக மனித உரிம வழக்குகளை எடுத்து விசாரிப்பதில் பெயர்ப்போன சங்கரசுப்புவின் மகன் மரணம், வழக்கறிஞர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

முதலில் மாநில காவல்துறையால் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கு, 2012 ஆம் ஆண்டு மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) மாற்றப்பட்டது. இதனை தற்கொலை வழக்கு என அறிக்கை பதிவு செய்தனர்.

ஆனால், சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிபிஐ முன்னாள் இயக்குநர் ஆர்.கே தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவினர், இந்த வழக்கை கொலை என நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

இதனால் சதீஷ்குமார் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்ற மர்மம் நீடித்து வந்த நிலையில், இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது, இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சங்கரசுப்பு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் பசந்த் மற்றும் ராகுல் ஷியாம் பண்டாரி, " சதீஷ்குமார் மரணம் தொடர்பான விவகாரத்தில் காலாண்டு நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், சிபிசிஐடி கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து எந்த ஒரு அறிக்கையையும் தாக்கல் செய்யவில்லை.

CB-CID என்பது மாநில காவல்துறையின் ஒரு அங்கமாகும். இவ்வழக்கின் விசாரணை நியாயமாக நடக்குமா என்ற சந்தேகம் குடும்பத்தினருக்கு உள்ளது.

விசித்திரமான இந்த வழக்கை மாநில காவல்துறையின் மற்றொரு பிரிவிற்கு வழங்குவது நிச்சயம் பலனளிக்காது. ஆரம்பத்தில் விசாரணையைத் தடுக்க தற்கொலை என்ற பிம்பம் உருவாக்கப்பட்டது.இந்த வழக்கை எஸ்ஐடி குழுவினரே தொடர வேண்டும் என விரும்புகிறோம். அப்போதைய எஸ்ஐடி குழுவில் யாராவது இல்லையென்றால், நீதிமன்றம் மற்றொரு நபரை நியமிக்கலாம் என்றனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசூட், " வழக்கறிஞரின் மகன் மரணம் தொடர்பான விவகாரத்தில் கடந்த ஒரு வருடமாக மேற்கொண்ட விசாரணையின் நிலை அறிக்கையை 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய சென்னை சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதுவரை என்ன முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்பதை முதலில் பார்ப்போம். எங்கள் மனதிலும் சில விருப்பங்கள் உள்ளன. இந்த அறிக்கையைப் பார்த்த பிறகு அதனை தெரிவிப்போம்" என்றார்.மேலும், இந்த வழக்கை நான்கு வாரங்களுக்குப் பிறகு பட்டியலிட தெரிவிக்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Supreme Court Cbcid
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment