Advertisment

உள் இட ஒதுக்கீட்டுக்கான உச்சநீதிமன்ற தீர்ப்பு: திராவிட மாடலுக்கு கிடைத்த அங்கீகாரம்; தி.மு.க பாராட்டு!

தமிழ்நாடு அரசு குறிப்பாக 2009 ஆம் ஆண்டு துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ள மற்றும் வரலாற்று ரீதியாக ஒதுக்கப்பட்ட தலித் குழுவான அருந்ததியர்களுக்கு சிறப்பு பிரதிநிதித்துவம் வழங்கும் சட்டத்தின் சரிபார்ப்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பார்க்கிறது.

author-image
WebDesk
New Update
Karunanithi and MK Stalin

முன்னாள் முதல்வர் கருணாநிதி - மு.க.ஸ்டாலின்

இட ஒதுக்கீடு நோக்கத்திற்காக பட்டியல் இன மக்களுக்கு மாநில அரசு உள் ஒதுக்கீடு கொடுக்கலாம் என்று உச்சநீதிமனம் உத்தரவிட்ட நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் “சமூகத்தின் அனைத்து ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கும் சமூக நீதியை உறுதி செய்வதற்கான திமுகவின் திராவிட மாடலுக்கு கிடைத்த அங்கீகாரம் என்று கூறியுள்ளார்.

Advertisment

Read In English: Supreme Court order on SC sub-quotas: DMK hails it as ‘nod to Dravidian model’

மேலும் உச்ச நீதிமன்ற உத்தரவை குறிப்பாக 2009 ஆம் ஆண்டு தமிழகத்தில் தி.மு.க அரசால் நிறைவேற்றப்பட்ட அருந்ததியர்கள் (சிறப்பு இடஒதுக்கீடு) சட்டத்தின் சரிபார்ப்பாகக் இருக்கிறது என்றும் கூறியுள்ளனர். தமிழ்நாட்டில், எஸ்சி பிரிவினருக்கான 18% இடஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்தார். அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் அருந்ததியர்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதை எடுத்துக்காட்டி, அச்சமூகத்தின் கோரிக்கைகளை இந்த சட்டம் மூலம் நிறைவேற்றியது.

அருந்ததியர்களுக்கான இந்த உள் ஒதுக்கீடு, தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டுக் கொள்கை, பல்வேறு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 69% ஒட்டுமொத்த ஒதுக்கீட்டை அனுமதிப்பது, பல ஆண்டுகளாக உள்ளடக்கிய மற்றும் சமூக மேம்பாட்டின் முன்மாதிரியாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

1951- அரசியல் அமைப்பு சட்டத்தின்படி,எஸ்.சி/எஸ்.டி ( SC/ST) பிரிவினர்களுக்கு 16% இடஒதுக்கீடு மற்றும் ஓபிசி (OBC)  பிரிவினருக்கு 25% இட ஒதுக்கீடு இருந்தது. இதை 1971 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் ஓபிசி இடஒதுக்கீடு 30% ஆகவும், எஸ்.சி/எஸ்.டி (SC/ST) 18% ஆகவும் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு 1980-களின்  பிற்பகுதியில், ஒரு தீவிரமான நடவடிக்கையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (எம்பிசி) 20% இடஒதுக்கீட்டை வழங்கியது. இதன் மூலம் ஓ.பி.சி (OBC ) பிரிவில் இருந்து எம்.பி.சி வெளியேற்றியது.

மாநிலத்தின் தற்போதைய இடஒதுக்கீடு கட்டமைப்பில், பி.சி (BC) களுக்கு 30% (கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் உட்பட), எம்.பி.சி. (MBC) களுக்கு 20%, எஸ்.சி (SC ) களுக்கு 18% மற்றும் எஸ்.டி (ST) சமூகத்திற்கு 1% ஆகியவை அடங்கும். 2009 ஆம் ஆண்டு கருணாநிதியின் ஆட்சியில் அருந்ததியர்களுக்கான உள் ஒதுக்கீடு வழங்கியது, திமுகவுக்கான வாக்கு வங்கியை உறுதி செய்தது. இந்த உள் ஒதுக்கீடு விவகாரம்  சென்னை உயர் நீதிமன்றத்தில் சவால்களை எதிர்கொண்டாலும், உச்ச நீதிமன்றத்தில் வழங்குகள் நிலுவையில் உள்ள காரணத்தினால், உள் ஒதுக்கீடு நிறுத்தப்படவில்லை.

வட தமிழ்நாட்டில் எஸ்.சி (SC) பிரிவில் பறையர்கள் சமூகமும், தென் தமிழ்நாட்டில் பள்ளர்கள் சமூகவும் குவிந்துள்ள நிலையில், அருந்ததியர்கள் பெரும்பாலும் மேற்குத் தமிழ்நாட்டில் அதிகமாக வாழ்கின்றனர். வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன், நீலம் மையத் தலைவரும் திரைப்படத் இயக்குனருமான பா.ரஞ்சித் போன்ற முக்கிய தலித் பிரமுகர்கள் பறையர்கள் சமூகத்தை சார்ந்தவர்கள்.

அதேபோல் திமுக கூட்டணியில் உள்ள ஏழு தலித் எம்.பி.க்களில் ஒருவர் கூட அருந்ததியர்கள் இல்லை என்றாலும், அருந்ததியர் சமூகத்தைப் பற்றி அடிக்கடி எழுதும், தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கத்தின் தலைவர் எம்.மதிவண்ணன் கருத்துப்படி, 70% வாக்குகள் தி.மு.க.வுக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் அருந்ததியர் சமூகம் திமுக பக்கம் செல்கிறது. 1916 ஆம் ஆண்டு முதல் எவ்வளவோ முயற்சித்தபோதிலும் அருந்ததியர்களுக்கு முக்கிய அரசியல் மற்றும் சமூகப் பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டது. அம்பேத்கரையும், பெரியாரையும் சின்னதாக அரவணைத்திருக்கிறார்கள் என்று மதிவண்ணன் கூறியுள்ளார்.

மேலும் தலித்துகளில் அருந்ததியர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாக இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. முக்கியமாக பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ், அவர்கள் நகர்ப்புறங்களில் துப்புரவுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். பறையர்கள் மற்றும் பள்ளர்கள், ஒப்பிடுகையில், ஆங்கிலேயர்களுடன் அதிக தொடர்பு கொண்டிருந்தனர். அதே சமயம் பலர் கல்வி மற்றும் வாழ்வாதாரத்திற்காக கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்கள்.

இன்று வரை, தென் தமிழகத்தில் நல்ல எண்ணிக்கையிலான பள்ளிகள் உள்ளன, பல மிஷனரிகளால் அமைக்கப்பட்டன, அதே நேரத்தில் அருந்ததியர் வசிக்கும் பெரும்பான்மையான பகுதிகள் கல்வி வசதிகளில் பின்தங்கியுள்ளன. ஒருவேளை பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் அவர்களின் சமூக நிலை காரணமாக, பல அருந்ததியர்கள் ராஜ்ஜியத்திற்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் இணைந்தனர். தமிழ்நாட்டின் பிராமண எதிர்ப்பு இயக்கத்திலும் அவர்கள் முன்னணியில் இருந்தனர்.

இது குறித்து வரலாற்றுப் பேராசிரியரும், மாநிலத்தின் சாதி இயக்கவியலில் நிபுணருமான கே.ஏ.மணிகுமார் கூறுகையில், உச்ச நீதிமன்ற உத்தரவு அருந்ததியர் போன்ற தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு கிடைத்த தகுதியான அங்கீகாரமாகும். சென்னையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மென்ட் ஸ்டடீஸில் (எம்ஐடிஎஸ்) கற்பித்து வந்த தலித் ஆராய்ச்சியாளர் சி.லட்சுமணன், இந்த உத்தரவு எஸ்சிக்களுக்குள் பிளவை ஏற்படுத்தி, அவற்றைப் பயன்படுத்த விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு சாதகமாக அமையும் என்று அச்சம் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசியலமைப்பு சாதியை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, எந்தவொரு உறுதியான நடவடிக்கையும் தனிப்பட்ட சாதி சார்ந்ததாக இல்லாமல் குழு சார்ந்ததாக இருக்க “தமிழ்நாட்டில் எஸ்சிக்களுக்குள் 76 தனி சாதிகள் உள்ளன. ஒவ்வொரு துணைப் பிரிவினரின் இடஒதுக்கீட்டுக் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பது நடைமுறையில் சாத்தியமா? துணை சாதிப் பிரிவுகளை விட கல்வி மற்றும் சமூக-பொருளாதார நிலைமைகளுக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

தலித்துகள் பிரிவினையால் இந்த உத்தரவு பாஜகவுக்கும் உதவக்கூடும். தெற்கில் உள்ள பள்ளர்கள் ஏற்கனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டணி கட்சியான புதிய தமிழகம் கட்சியின் பின்னால் உள்ளனர். இருப்பினும், இந்தியாவின் கூட்டாளியான தலித்-மைய வி.சி.க (விடுதலை சிறுத்தைகள் கட்சி) எம்.பி கே ரவிக்குமார், உச்ச நீதிமன்ற உத்தரவை வரவேற்று, எஸ்.சி சமூகங்களின் சமூக-பொருளாதார நிலையை ஆய்வு செய்ய ஒரு ஆணையத்தை நியமிக்க தமிழக அரசைக் கேட்டுக் கொண்டார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Dmk Dmk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment