/tamil-ie/media/media_files/uploads/2022/11/tamil-indian-express-2022-07-06T111400.237.jpg)
The Supreme Court on Friday suspended a six-month sentence imposed by the Madras High Court on YouTuber Savukku Shankar for contempt of court, Live Law reported Tamil News
savukku shankar Tamil News: தமிழக லஞ்ச ஒழிப்பு துறையில் பணிபுரிந்த முன்னாள் அதிகாரியும் தற்போது சவுக்கு இணையதளத்தை நடத்தி வருபவர் பத்திரிகையாளர் சவுக்கு சங்கர். நீதித்துறையை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததாக, தானாக முன்வந்து பதிவு செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து கடந்த செப்டம்பர் மாதம் 15-ம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, தற்போது கடலூர் சிறையில் தனது சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார் சவுக்கு சங்கர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/tamil-indian-express-2022-07-06T112526.116.jpg)
இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கவும், ரத்து செய்யக்கோரியும் சவுக்கு சங்கர் சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, ஜே.கே.மகேஸ்வரி அடங்கிய அமர்வுக்கு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், அடுத்த விசாரணை வரை எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டனர்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.