ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான மேல் முறையீட்டு வழக்கில் உச்சநீதி மன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
கடும் போராட்டங்களுக்குப் பிறகு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், ஆலையை திறக்கலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு தாக்கல் செய்தது. ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வுக்குழு தாக்கல் செய்த அறிக்கையும், அங்கு இருக்கும் சூழலும் எதிர்மறையாக உள்ளது என்பது தமிழக அரசின் வாதம். ஆக மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என உச்சநீதி மன்றத்திடம் எடுத்துரைத்திருக்கிறது தமிழக அரசு.
வழக்கின் அனைத்து வாதங்களும் முடிந்து விட்ட நிலையில், நீதிபதிகள் ரோஹிண்டன் ஃபாலி நாரிமன் மற்றும் வினீத் சரண் அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி, ஆலையை திறக்க வேண்டும் என்ற வேதாந்த நிறுவனத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை ஏற்கப் பட்டுள்ளது.
அதோடு, வேதாந்த நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகும்படி உச்ச நீதி மன்றம் கூறியுள்ளது.