Tamil nadu news today updates : டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வை தொடர்ந்து குரூப் 2-ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் தினமும் புதுபுது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இன்று திமுக இளைஞரணி மற்றும் மாணவரணியின் சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, கையெழுத்து இயக்கத்தை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், சென்னையில் துவக்கி வைத்தார். மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, தமிழகத்தில், தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில், பல கட்ட போராட்டங்கள் நடந்தன. ஜனவரி, 24ல் சென்னையில் நடந்த கூட்டத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை, மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி, பிப்ரவரி, 2 முதல், 8ம் தேதி வரை, மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்த, முடிவு செய்யப்பட்டது. இதன்படி, தி.மு.க.,வின் கையெழுத்து இயக்கம், மாநிலம் முழுவதும் துவங்கியது. தன் சொந்த தொகுதியான, சென்னை, கொளத்துார் தொகுதிக்கு உட்பட்ட, திரு.வி.க., நகரில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், முதல் கையெழுத்து போட்டு, கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். வீடு வீடாகச் சென்று, மக்களிடம் ஸ்டாலின் கையெழுத்து வாங்கினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil nadu news today updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை கோட்டத்தில் பிப்.5 முதல் மார்ச் 4 வரை ரயில் போக்குவரத்தில் மாற்றம்
மதுரை - பழனி பயணிகள் ரயில் பிப்.12 முதல் பிப்.29 வரை முழுமையாக ரத்து
பழனிக்கு மதுரையிலிருந்து ஒரு ரயில் மட்டும் காலை 06.30 மணிக்கு இயக்கப்படும் - தென்னக ரயில்வே
சீனாவிற்குப் பயிற்சிக்காகச் சென்ற ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் தன்னை மீட்கக் கோரி வாட்ஸ் ஆப்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவிற்குப் பயிற்சிக்காகச் சென்ற ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் தன்னை மீட்கக் கோரி வாட்ஸ் ஆப்பில் கோரிக்கை.#SunNews #SunNewsSocial #China #Coronavirus #CoronaHospital #CoronaMedicine #AndhraGirl pic.twitter.com/94c4iNtVse
— Sun News (@sunnewstamil) February 3, 2020
முனைப்புடன் செயல்பட்டு வரும் நிலையில், அங்கு பல உருக்கமான சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள வுஹான் நகரில் எட்டே நாட்களில், அதிநவீன மருத்துவமனை கட்டி முடித்துள்ளது சீன அரசு. அங்கு, ஆயிரம் படுக்கைகளுடன், 419 வார்டுகள் அமைக்கப்பட்டு, சிகிச்சை துவங்கப்பட்டுள்ளது. இதுதவிர, ஆயிரத்து 500 படுக்கை வசதிகள் கொண்ட, மற்றொரு மருத்துவமனையை அமைக்கும் பணியை சீன அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஊருக்கு ஒதுக்குப்புறமாக சிறைச்சாலைபோல் மருத்துவமனை அமைக்கப்பட்டு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொருளாதார சுணக்கம் ஏற்படும் என்று சீனா கணித்துள்ளது. சீனாவில் முதல் காலண்டில் ஆப்பிள் ஐபோன்களின் விற்பனை குறைந்து, ஏற்றுமதியும் 10 % சரிவை கண்டுள்ளது. சீனாவின் புத்தாண்டு விடுமுறைகளின் போது விற்பனையான ஐபோன்களின் அடிப்படையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேக்ரூமர்ஸ் டாட்காம் கணிப்பின் படி முதல் காலண்டில் 3.5 முதல் 4 கோடி ஐபோன்கள் மட்டுமே விற்பனையாகும் என்று தெரிகிறது. ஆனால் 8 முதல் 8.5 கோடி ஐபோன்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் சில்லரை விற்பனை கடைகளில் இருந்து, பெரிய அளவிலான கடைகளும் பிப்ரவரி 9ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் சயின்ஸ் பிக்சன் படத்தின் பெயர் 'அயலான்' என்று வெளியாகியுள்ளது.சிவகார்த்திகேயன் நடிக்கும் 14வது படத்திற்கான தலைப்பை ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்!
Here is the title reveal of the movie #Ayalaan@siva_kartikeyan@Ravikumar_Dir @24AMStudios@kjr_studios#அயலான் pic.twitter.com/wNqVsR0BfP
— A.R.Rahman (@arrahman) February 3, 2020
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் வெளியான தர்பார் திரைப்படத்தால் நஷ்டம் ஏற்பட்டதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறி வருகின்றனர். இந்நிலையில், ரஜினியை சந்தித்து முறையிட விநியோகஸ்தர்கள், ரஜினியின் இல்லம் அமைந்துள்ள போயஸ் கார்டன் பகுதிக்கு வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால், வாக்குவாதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விநியோகஸ்தர் திருவேங்கடம், தர்பார் திரைப்படத்தால் 40 சதவீதம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
சென்னை அயனாவரம் மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 15 பேருக்கும் தண்டனை.
சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. குற்றம்சாட்டப்பட்ட 15 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்தது.
கடந்த 2018-ல் நடந்த சம்பவம் தொடர்பான வழக்கு, சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசுத் தரப்பில் 36 சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 7 சாட்சிகள், விசாரிக்கப்பட்டனர். 120 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
* 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
* ஒருவருக்கு 7 ஆண்டு சிறை, ஒருவருக்கு ஆயுள் தண்டனை
* மீதமுள்ள 9 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துவரும் நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் அரசு வேலை பறிக்கப்படும். கைது செய்வதோடு குற்றவியல் நடவடிக்கையும் பாயும்” என்று தெரிவித்துள்ளார்.
தர்பார் திரைப்படம் நஷ்டம் ஆனதாக விநியோகஸ்தர்கள் குற்றம்சாட்டியுள்ள நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ: தர்பார் பட வசூல் தொடர்பாக யாரும் அரசை அணுகவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் விஜய் தலைவி என்ற பெயரில் படமாக எடுத்துவருகிறார். இந்தப் படத்தில் ஜெயலலிதாவின் வேடத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா குறித்து பேசுகையில், “ஜெயலலிதா என்னைப்போல இல்லை. அவர் அழகான கவர்ச்சியான நடிகை. அதனால்தான், ஜெயலைதாவின் வாழ்க்கை வரலாற்றுக்குள் நான் பொருந்துவது பெரிய சவலாக இருந்தது. ஏனென்றால் நான் அவ்வளவு அழகான நடிகை இல்லை. எங்களுக்குள்ளான ஒற்றுமை என்றால் நாங்கள் இருவருமே நடிப்புத்துறைக்குள் வருவதற்கு தயக்கம் காட்டியுள்ளோம். அதனால்தான், நாங்கள் வழக்கமான நடிகைகளாக இல்லை. ஒரு நடிகை என்பதையும் தாண்டி அவரை அவர் நம்பினார். அதனால், அரசியலில் சாதித்தார். அதே போல, நானும் நடிகையாக நின்றுவிடாமல் சினிமா இயக்குகிறேன். எல்லா பெண்களையும் போல அவர் குடும்பத்துக்காக, குழந்தைக்காக ஏங்கினார். நானும் அப்படி ஏங்கியிருக்கிறேன். திருமணமான சில நடிகர்கள் அதனை பயன்படுத்திக்கொண்டனர்.” என்று தெரிவித்துள்ளார்.
சபரிமலை விவகாரம் தொடர்பான மறுஆய்வு மனுக்கள் மீதான விசாரணை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மனுக்கள் மீது யார் யார் எப்போது வாதிடுவது தொடர்பான நேரம் வியாழக்கிழமை முடிவு செய்யப்படும் என தலைமை நீதிபதி, தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
தாய்லாந்து நாட்டில் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எச்.ஐ.வி மற்றும் காய்ச்சல் தடுப்பு மருந்துகளை கலந்து கொடுத்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த நோயாளிக்கு கொடுத்ததில் காய்ச்சல் குறைந்துள்ளதாக தாய்லாந்து டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் சினிமா டிக்கெட் கட்டணம் வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். சென்னையில், ஆன்லைன் டிக்கெட் கட்டணம் குறித்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ இவ்வாறு தெரிவித்தார். தர்பார் பட வசூல் விவகாரம் தொடர்பாக, யாரும் அரசை அணுகவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
திமுகவில் உட்கட்சி தேர்தல் வருகிற 21ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிளை, பேரூர், ஒன்றிய, நகரம், மாநகரம் வாரியாக தேர்தல் நடைபெறும். தொடர்ந்து மாவட்ட கழகம், தலைமை கழகம், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும் என்று கட்சி தலைமை அறிவித்துள்ளது.
திமுக தேர்தல் பணிக்குழு செயலாளராக வீரபாண்டி ராஜா நியமனம் செய்து திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. அதேபோல், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளராக சிவலிங்கம், சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக டி.எம்.செல்வகணபதி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மக்களவை இன்று துவங்கியதும் எதிர்க்கட்சிகள், ஜாமியா பல்கலைகழகம் மற்றும் ஷாஹீன் பாக் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தியாவை காப்போம் , நாட்டின் ஜனநாயக மாண்பை மீட்போம் என்று கோஷம் எழுப்பினர். இதன்காரணமாக அவையில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணாதுரையின் நினைவுதினத்தை முன்னிட்டு திமுக சார்பில் சென்னையில் அமைதிப்பேரணி நடைபெற்றது. அண்ணா சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்கு முன்பாக, திமுக தலைவர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
அதிமுகவினரும். அண்ணா சமாதியில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
மருத்துவ மாணவி 'நிர்பயா' பாலியல் பலாத்கார வழக்கின் குற்றவாளிகளுக்கான துாக்கு தண்டனையை தாமதமின்றி நிறைவேற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை டில்லி உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights