ஆகஸ்ட் 17 முதல் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: செங்கோட்டையன்
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஆகஸ்ட் 17ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஆகஸ்ட் 17ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
Advertisment
செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் ஆகஸ்ட் 17ம் தேதி ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை தொடங்கும். அதே நாளில் மாணவர்கள் பள்ளி இடமாற்றங்களும் தொடங்கும்.
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்போது, பள்ளிகள் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட சமூக இடைவெளி விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மாணவர் சேர்க்கைக்குப் பிறகு இலவச புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள் விநியோகிக்கப்பட வேண்டும். பிளஸ் 1 மாணாவர் சேர்க்கை ஆகஸ்ட் 24 ஆம் தேதி தொடங்கும்.” என்று அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு தேர்வு இயக்குநரகம் திங்கள் கிழமை 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிவித்த பின்னர், பல அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உடனடியாக மாணவர் சேர்க்கைகளைத் தொடங்க விரும்பியது.
கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக தமிழக அரசு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ததோடு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடைந்ததாக அறிவித்தது. இதனால், தமிழகத்தில் 10ம் வகுப்பில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்ததால் பள்ளிகளில் மாணவர்கள் பெரிய அளவில் பிளஸ் 1-ல் வணிகவியல் பிரிவில் சேர்வதற்கு ஆர்வத்துடன் வந்து விசாரித்து செல்வதாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறுகின்றனர். மேலும், பல மாணவர்கள் அறிவியல் பாடப் பிரிவில் சேர்வதற்காக வந்து விசாரித்து செல்வதாகவும் கூறுகின்றனர்.
அதே போல, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25% இடங்களுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைனில் செய்யப்படும். மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குனரகம் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கை குறித்து தனி அறிவிப்பை வெளியிடும் என்றும் இந்த ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் சுமார் 80,000 மாணவர்கள் எல்.கே.ஜி வகுப்புகள் சேர்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”