சென்னை, திருவள்ளூர், சேலம், காஞ்சி, வேலூர், நீலகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், தர்மபுரி, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போன்று புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் செங்கல்பட்டு, கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் வட தமிழக கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளது.
தற்போது, காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கே, தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது. இன்று அதிகாலை வட தமிழகம் தெற்கு ஆந்திரா கடற்பகுதியில் சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையே கரையை கடக்கும் என்று கூறப்பட்ட நிலையில் சென்னைக்கு தரப்பட்ட ரெட் அலர்ட் திரும்ப பெறப்பட்டது.
மேலும் திருச்சி, கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
இதற்கிடையில், சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதி கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil