மழைநீர் சூழ்ந்த பள்ளி: கழிவறைக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் மாணவர்கள்; நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் இதுவரை அந்த தண்ணீர் வெளியேற்றப்பட முடியாததால் பல்வேறு இடங்களில் சுகாதார செயல்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

author-image
WebDesk
New Update
logging rain water in trichy

இடைவிடாமல் பெய்த கனமழை பள்ளி சுற்றி மழைநீர் சூழ்ந்து உள்ளது. பள்ளியில் தண்ணீர் தேங்கியதால் கழிவறைக்கு செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் இதுவரை அந்த தண்ணீர் வெளியேற்றப்பட முடியாததால் பல்வேறு இடங்களில் சுகாதார செயல்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

Advertisment

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், இனாம்மாத்தூர் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 450-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். சென்ற வாரம் புதன்கிழமை மாலை முதல் வெள்ளிக்கிழமை இரவு வரை இடைவிடாமல் பெய்த கனமழை பள்ளி சுற்றி மழைநீர் சூழ்ந்து உள்ளது.
பள்ளியில் தண்ணீர் தேங்கியதால் கழிவறைக்கு செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள். 

இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாவட்டத்தில் இந்த அவலம் தொடர்வது வேதனை அளிப்பதாகவும், மாவட்ட நிர்வாகம் இந்த அவலநிலையை போக்க உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவ, மாணவிகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழை நின்றும் தண்ணீர் இன்னும் வடியாததால் பல்வேறு இடங்களில் சுகாதார சீர்கேடும் ஏற்படும் அபாயம் திருச்சியில் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

செய்தி: க. சண்முகவடிவேல்

Advertisment
Advertisements
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Tiruchi District

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: