மாணவர்கள் இடையே மோதல்: சக மாணவனுக்கு அரிவாள் வெட்டு; நெல்லை பள்ளியில் பயங்கரம்

நெல்லை மாவட்டம், வள்ளியூர் அடுத்துள்ள ஏர்வாடி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளியில், 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, வகுப்பறையிலேயே ஒரு மாணவன் சக மாணவனை அரிவாளால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
nellai students fight

மாணவர்கள் இடையே மோதல்: சக மாணவனுக்கு அரிவாள் வெட்டு; நெல்லை பள்ளியில் பயங்கரம்

நெல்லை மாவட்டம், வள்ளியூர் அடுத்துள்ள ஏர்வாடி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளியில், 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, வகுப்பறையிலேயே ஒரு மாணவன் சக மாணவனை அரிவாளால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மோதல் பின்னணி

மாணவர்களுக்கு இடையே வகுப்பறையில் அருகே அமர்வது தொடர்பாகப் பிரச்னை மற்றும் வாக்குவாதம் எழுந்துள்ளது. இந்தப் பிரச்னை சம்பவத்துக்கு முந்தைய நாளும் நடந்துள்ளது. சம்பவம் நடந்த இன்று காலை, பள்ளிக்கு வந்த மாணவன், தனது புத்தகப்பையில் மறைத்து வைத்திருந்த சிறிய அரிவாளை எடுத்து, சக மாணவனின் முதுகுப் பகுதியில் சரமாரியாகத் தாக்கியுள்ளான். இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அரிவாளைத் தடுக்க முயன்ற மற்றொரு மாணவனின் கையிலும் லேசான காயம் ஏற்பட்டது.

வகுப்பறையில் இருந்த ஆசிரியர்கள் உடனடியாகச் செயல்பட்டு, தாக்கிய மாணவனைப் பிடித்துக் கட்டுப்படுத்தினர். காயமடைந்த மாணவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஏர்வாடி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது, காயமடைந்த மாணவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், அரிவாளால் தாக்கிய மாணவனை வகுப்பறையில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளியில் இதுபோன்ற சம்பவம் நடந்தது காரணமாக, சம்பவ இடத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. நிலைமையைக் கட்டுக்குள் வைக்க, கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

Advertisment
Advertisements
Nellai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: