மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பள்ளி முதல்வர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சேர்ந்தவர் சிவராமன். இவர் நாம் தமிழர் கட்சியின் கிருணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக உள்ளார். இவர் கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சில தனியார் பள்ளிகளில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு பயிற்றுனராகவும் உள்ளார்.
இந்நிலையில் இவர் சில வாராங்களுக்கு முன்பாக தனியார் பள்ளி மாணவியிடம் தவறாக முறையில் நடந்து கொண்டுள்ளார். இதை அந்த மாணவி பெற்றோரிடம் கூறியதும், சிவராமன் மீது கந்திக்குப்பம் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.
இந்நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் போக்சோ பிரிவில் சிவராமனை கைது செய்ய சென்றபோது, அவர் தலைமறைவானார். இந்நிலையில் காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர். மேலும் அவர் நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கில் பள்ளி முதல்வர், தாளாளர், பயிற்சியாளர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காவல்துறையினர் விசாரணையில் 13 மாணவிகள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மாணவி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகியை போலிசார் கைது செய்தனர். கோவையில் இருந்து அவர் கைது செய்யப்பட்ட போது, அவர் தப்பி ஓடியதால் காலில் முறிவு ஏற்பட்டு மாவு கட்டு போடப்பட்டதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“