தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு கோவையில் மழலையர் பள்ளி குழந்தைகள் பாரம்பரிய உடைகள் அணிந்தும், தமிழர்களின் கலாச்சாரத்தை முன் நிறுத்தியும் உற்சாகமாக கொண்டாடினர்.
தமிழர்களின் தாய்நிலமான தமிழ்நாடு, சென்னை மாகாணம் என அழைக்கப்பட்டு வந்தது. சென்னை மாகாணம் என்ற பெயரை மாற்றி தமிழர்கள் தாய்மண்ணுக்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய நாள் இன்று ஜூலை 18 ஆகும். இந்த நாள் "தமிழ்நாடு நாளாக தமிழ்நாடு அரசால்" மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள டிரினிட்டி பள்ளியில் மழலையார் குழந்தைகள் தமிழர்களின் கலாச்சாரத்தை போற்றும் விதமாக, பாரம்பரிய வேஷ்டி,சேலைகள் அணிந்தும், இந்தியா போராட்ட தியாகிகள், கல்விக்கு முக்கியம் தந்த பாரதியார்,திருவள்ளுவரின் வேடமணிந்து அவர்களின் வாழ்வியல் முறையை மழலையர் குரலில் வெளிப்படுத்தி கொண்டாடினர்.
அதே போல் தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலைகள், ஏர் கலப்பை விவசாயம், விவசாய விளை பொருட்கள்,உணவு பொருட்கள், சமையல் பொருட்கள் , உள்ளிட்டவையினை ஆகியவை தத்ரூபமாக காட்சிப்படுத்தி அசத்தினர்.
இதனை பெற்றோர்கள், ஆசியர்கள், வியப்புடன் பார்த்து சென்றனர் என்பது குறிப்பிடதக்கது.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“