scorecardresearch

பேருந்தில் பீர் குடித்த அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள்.. போலீசார் விசாரணை!

சென்னையில் அரசுப் பள்ளி மாணவர்கள், பேருந்துக்குள் பீர் குடித்த சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai
School students drink beer inside bus in Chennai video went viral

சென்னையில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள், பேருந்தில் பீர் அருந்துவது போன்ற வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து போலீசார் மற்றும் மாவட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதலில், அந்த வீடியோ பழையது என்று கூறப்பட்டது. பின்னர், போலீஸார் நடத்திய விசாரணையில், இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை நடந்தது தெரியவந்தது.

சம்பந்தபட்ட மாணவர்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்தவர்கள்.

செவ்வாய்க்கிழமை பள்ளி முடிந்ததும், திருக்கழுக்குன்றத்தில் இருந்து தச்சூர் செல்லும் பேருந்தில் மாணவ, மாணவிகள் குழு ஏறினர். வழியில், அவர்கள் பீர் பாட்டில்களைத் திறந்து, பொது மக்கள் பார்வையில், பேருந்திற்குள் குடிக்கத் தொடங்கினர்.

மேலும் அதை தங்கள் செல்போன்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோவாகவும் எடுத்தனர்.

இந்த சம்பவத்தை செங்கல்பட்டு மாவட்ட கல்வி அதிகாரி ரோஸ் நிர்மலா உறுதி செய்துள்ளார். “இது பள்ளிக்கு வெளியே நடந்ததால், போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அது முடிந்ததும், உரிய நடவடிக்கை எடுப்போம்,” என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: School students drink beer inside bus in chennai video went viral