ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சந்திராயன்-3 விண்ணில் பாய்ந்த நிகழ்வை கோவை மாவட்ட மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மசக்காளிபாளையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கீரணத்தம் பள்ளி மாணவர்கள் நேரில் கண்டு களித்தனர்.
மேலும் அங்கே உள்ள காட்சியகத்தில் (Gallery) பார்வைக்கு வைக்கபட்டிருந்த இஸ்ரோவின் ராக்கெட், செயற்கைக்கோள் மாதிரிகள், உதிரி பாகங்கள் ஆகியவற்றைப் பார்த்து மகிழ்ந்தனர்.
மேலும் நாடு முழுவதிலும் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பார்வையிட்ட நிகழ்வில் இவர்களும் பங்கேற்று பயன்பெற்றனர்.
மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் வானியல் பற்றிய ஏராளமான அனுபவத்தைப் பெற்றுத் தந்தது இந்தப் பயணம் என மாணவர்கள் தகவல் தெரிவித்தனர்.
கோவை (RAAC) அமைப்பு இந்தப் பயணத்திற்கான செலவை ஏற்றுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“