பணிபுரிந்த கல்லூரிக்கு வந்து தற்கொலை செய்துகொண்ட ஆசிரியை - சென்னையில் பரபரப்பு
Suicide in chennai college : அரசு வேலை கிடைத்த பின்னரும், தான் பணியாற்றிய தனியார் கல்லூரிக்கு சென்ற ஆசிரியை ஒருவர் தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு வேலை கிடைத்த பின்னரும், தான் பணியாற்றிய தனியார் கல்லூரிக்கு சென்ற ஆசிரியை ஒருவர் தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னையில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
சி.ஏ.ஏ-க்கு எதிராக தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம்...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த கர்லபாக்கத்தைச் சேர்ந்தவர் சாந்தி (32). இவரின் அப்பா இறந்துவிட்டார். அம்மா சத்துணவு பணியாளராகப் பணியாற்றிவருகிறார். படிப்பை முடித்த சாந்தி, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் தெலுங்கு பேராசிரியையாக சில ஆண்டுகளாக பணியாற்றிவந்தார். இந்தநிலையில் அவருக்கு 2012-ம் ஆண்டு சென்னை பெரம்பூரில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியை பணி கிடைத்தது. அங்கு பணியாற்றி வந்த சாந்தி, 17ம் தேதி மதியம் அரும்பாக்கத்தில் தான் பணியாற்றிய தனியார் கல்லூரிக்கு வந்தார்.
கல்லூரியில் அவர் பாடம் எடுத்த வகுப்பறைக்குச் சென்றவர், அங்குள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தூக்கில் தொங்கிக்கொண்டிருக்கும் தகவல் தெரிந்ததும் கல்லூரி நிர்வாகமும் மாணவிகளும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அரும்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று சாந்தியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாந்தியின் மொபைல்போன் அழைப்புகள் அடிப்படையில், ஒருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் அடிப்படையிலேயே, தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.