scorecardresearch

குமரி: வகுப்பறையில் மாணவிகளை மதமாற்றம் செய்ய முயன்ற ஆசிரியர் சஸ்பெண்ட்

காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் பதிவுசெய்யப்பட்ட பள்ளிச் சிறுமியின் வீடியோவில், ஆசிரியர் ஒருவர் தங்களை பைபிளைப் படிக்குமாறு வற்புறுத்தியதாக சிறுமி குற்றம் சாட்டினார்

குமரி: வகுப்பறையில் மாணவிகளை மதமாற்றம் செய்ய முயன்ற ஆசிரியர் சஸ்பெண்ட்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர், பள்ளி நேரத்தின்போது மதப் பிரச்சாரம் செய்ய முயன்றதாக மாணவி ஒருவர் புகார் அளித்ததையடுத்து, ஆதிரியர் புதன்கிழமை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை அதிகாரிகளின் முன்னிலையில் பதிவுசெய்யப்பட்ட பள்ளிச் சிறுமியின் வீடியோவில், ஆசிரியர் தங்களை பைபிளை படிக்குமாறு வற்புறுத்தவது மட்டுமின்றி முட்டிபோட்டு பிரேயர் பண்ண சொல்லிக் கட்டாயப்படுத்துவார் என தெரிவித்தார். எங்களை பைபிள் வாசிக்க சொல்லுவார். நாங்கள் இந்துனு சொல்லுவோம். பகவத் கீதை மட்டும் தான் படிப்போம். பைபிள் படிக்க மாட்டோமுனு கூறினோம். அதற்கு அவர், பைபிள்தான் நல்ல புத்தகம், பகவத்கீதை கெட்டது என சொல்லித்தங்ததா மாணவி கூறியதை வீடியோவில் கேட்க முடிந்தது.

இதுகுறித்து மாணவி ஒருவர் பெற்றோரிடம் தெரிவித்தையடுத்து, பள்ளி நிர்வாகத்திடமும் காவல் துறையிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாணவர்களிடமும், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.அப்போது, மாணவிகள் தங்களது அனுபவங்களை காவல் துறையிடம் தெரிவித்தனர். அச்சமயத்தில், அவர்கள் காவல் துறையினர் முன்னிலையில் பேசிய வீடியோ லீக் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புகார் வந்ததும், முதன்மைக் கல்வி அதிகாரியும், மாவட்ட நிர்வாகமும் முதற்கட்ட விசாரணை நடத்தி, ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்ததாக பள்ளித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொண்டுகேட்ட போது, ஆசிரியர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: School teacher suspend for preaching religion in classroom at kanyakumari