தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு முதல்வர் பழனிசாமி பதிலளித்துள்ளார்.
நீலகிரியில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகளை ஆய்வு செய்த முதல்வர் பழனிசாமி, ரூ.520 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், புதிய கட்டிடங்கள் திறப்பு மற்றும் புதிய திட்டங்களைத் இன்று தொடங்கி வைத்தார்.
பின்ன செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமியிடம், தமிழகத்தில் மீண்டும் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, “நவம்பர் 9 ம் தேதி அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தின்போது தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.
தமிழகத்தில் நவம்பர் 16ம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு முதலில் அறிவித்தது. பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டால் மாணவர்களுக்கு கொரோன வைரஸ் தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளதாக எதிர்க்கட்சிகள், ஆனால் பெற்றோர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, நவம்பர் 9ம் தேதி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களின் தலைமையில் மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துக் கேட்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது.
நீலகிரி மாவட்டத்தில், சுற்றுலா இடங்களை மீண்டும் திறப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, சுற்றுலா இடங்களை படிபடியாக திறந்து வைப்பதற்கும், சில கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பதற்கும் அரசாங்கம் பரிசீலித்து வருவதாகக் கூறினார்.
தேயிலைக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையை(எம்.எஸ்.பி) அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, இப்போது ஒரு கிலோ தேயிலையின் குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.30 ஆக இருப்பதால் இந்த பிரச்சினை குறித்து ஆராயப்படும் என்றார்.
நீலகிரி மாவட்டத்தில், கடுமையாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளை மாவட்டத்திற்கு வெளியே உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதற்கு விமான ஆம்புலன்ஸ்கள் தேவைப்படுவது குறித்து, பதிலளித்த முதல்வர் பழனிசாமி, இந்த விஷயத்தை அரசாங்கம் பரிசீலிக்கும் என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"