kancheepuram | chengalpattu | காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சனிக்கிழமை (நவ.25) விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.
அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்திலும் விடுமுறை அளித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து, சிறப்பு வகுப்புகள் நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் திங்கள்கிழமை 27-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், வரும் 29ஆம் தேதி காற்றழுத்த மண்டலமாக மாற வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 7 தினங்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, தேனி, தூத்துக்குடி திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக பெய்துவருகிறது.
மதுரையை பொறுத்தமட்டில் அதிகபட்சமாக வாடிப்பட்டி 69 மி. மீ. மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் பரவலாக 23.32 மி.மீ மழை பெய்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“