கனமழை காரணமாக வால்பாறை மற்றும் நீலகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வால்பாறை மற்றும் நீலரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  இதனால் கடந்த 2 நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், வால்பாறையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அப்பகுதியில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவிட்டு உள்ளார்.

இதேபோல் நீலகிரியிலும் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார்.

×Close
×Close