பள்ளிகள் திறப்பு குறித்து நாளை முக்கிய முடிவு: செங்கோட்டையன்

பள்ளிகளைத் திறப்பது குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது

By: Updated: November 11, 2020, 01:06:49 PM

schools reopening date schools reopening news : தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பேசிய பிறகு, வரும் 12-ம் தேதி இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளை வரும் 16ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு முடிவு செய்திருந்தது.ஆனால், கொரோனா தொற்று இன்னும் முழுமையாக அகலவில்லை என்பதால், அரசின் அறிவிப்புக்கு திமுக உள்பட எதிர்க்கட்சிகளும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில், தான் கடந்ஹ திங்கட்கிழமை, தமிழகம் முழுவதும் பெற்றோர்கள், பொதுமக்களிடம் பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது, “தமிழகம் முழுவதும் நேற்று பள்ளிகளைத் திறப்பது குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. 45% பெற்றோர்கள் மட்டுமே இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பள்ளிகளைத் திறப்பது குறித்து விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பேசிய பிறகு, வரும் 12-ம் தேதி இறுதி முடிவு அறிவிக்கப்படும். இடையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் உரிய வகையில் முறையாக நடைபெறும்.

பள்ளிகள் சுத்தம் செய்யப்பட்டு வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவசச் சீருடைகள், புத்தகங்கள் மற்றும் காலணிகள் தயார் நிலையில் உள்ளன. 16,300 அரசுப் பள்ளி மாணவர்கள் விண்ணப்பித்து நீட் தேர்வுக்காகப் பயிற்சி பெற்று வருகின்றனர்.

நீட் தேர்வு குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு” என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Schools reopening date schools reopening news tamil schools open tamil news today

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X