Advertisment

சந்திரயான் விண்கலத்தை தத்ரூபமாக வடிவமைத்து அசத்திய பள்ளி மாணவர்கள்

கோவையில் பள்ளி மாணவர்கள் விக்ரம் லேண்டரிலிருந்து பிரக்யான் ரோவர் இறங்குவது போல் தத்ரூபமாக வடிவமைத்தவுடன் மாணவர்களின் கன்னங்களில் சந்திரயான் விண்கலத்தை வரைந்து அசத்தியுள்ளனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மாணவர்கள்

மாணவர்கள்

கோவையிலிருந்து விண்கலம் தயாரிப்பதற்காக உதிரி பாகங்கள் எடுத்து செல்லப்பட்டு உள்ளதும் - தமிழகத்தைச் சேர்ந்த இஸ்ரோ இயக்குனர் வீரமுத்துவேல் இந்தியாவிற்கு பெருமை சேர்த்ததையும் பள்ளி மாணவர்கள் கொண்டாடினர்.

Advertisment

கோவையில் பள்ளி மாணவர்கள் விக்ரம் லேண்டரிலிருந்து  பிரக்யான் ரோவர் இறங்குவது போல் தத்ரூபமாக வடிவமைத்தவுடன் மாணவர்களின் கன்னங்களில் சந்திரயான் விண்கலத்தை வரைந்து அசத்தியுள்ளனர்.

publive-image

நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விக்ரம் லேண்டரை வெற்றிக்கரமாக தரையிறக்கி இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளனர்.நாடு முழுவதும் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

publive-image

இந்நிலையில் கோவை மணியக்காரன்பாளையம் பகுதியில் உள்ள கேம்போர்டு பள்ளி மாணவர்கள், சந்திரயான் விண்கலத்தை வெற்றிகரமாக கையாண்ட விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சந்திராயனின் மாதிரியை தத்ரூபமாக வடிவமைத்திருந்தனர்.

publive-image

இதில் விக்ரம் லேண்டரிலிருந்து பிராக்யான் ரோவர் இறங்குவது போல் மாணவர்கள் தயாரித்ததோடு, கன்னங்களில் சந்திரயான் 3 விண்கலம் மற்றும் தேசிய கொடியை வரைந்து அசத்தினர். தொடர்ந்து  கோவையிலிருந்து விண்கலம் தயாரிப்பதற்காக உதிரி பாகங்கள் எடுத்து செல்லப்பட்டு உள்ளதும் . மேலும் தமிழகத்தைச் சேர்ந்த இஸ்ரோ இயக்குனர் வீரமுத்துவேல் இந்தியாவிற்கு பெருமை சேர்த்ததையும் பள்ளி மாணவர்கள் கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

publive-image

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment