தமிழ்நாட்டில் மீண்டும் வெயில் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு மேலாக மழை பெய்து வந்த நிலையில் மீண்டும் பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வந்த நிலையில் மீண்டும் வெப்பநிலை அதிகரித்து வருவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்று (ஜுன் 31) தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானது. 17 இடங்களில் வெயில் சதமடித்தது. 17 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. சென்னை, வேலூர் மற்றும் திருத்தணியில் வெயில் கொளுத்தியது.
வேலூர் - 110.6 டிகிரி பாரன்ஹீட்
திருத்தணி - 108.5 டிகிரி பாரன்ஹீட்
மீனம்பாக்கம் -106.7 டிகிரி பாரன்ஹீட்
ஈரோடு - 105.4 டிகிரி பாரன்ஹீட்
நுங்கம்பாக்கம் - 104.3 டிகிரி பாரன்ஹீட்
மதுரை விமான நிலையம் - 103 டிகிரி பாரன்ஹீட்
மதுரை நகரம் - 104 டிகிரி பாரன்ஹீட்
புதுச்சேரி - 103.5 டிகிரி பாரன்ஹீட்
நாகப்பட்டினம் - 101 டிகிரி பாரன்ஹீட்
கடலூர் - 103.1 டிகிரி பாரன்ஹீட்
திருச்சி - 103 டிகிரி பாரன்ஹீட்
தஞ்சாவூர் - 104 டிகிரி பாரன்ஹீட்
கரூர் பரமத்தி - 103 டிகிரி பாரன்ஹீட்
நாமக்கல் - 102 டிகிரி பாரன்ஹீட்
சேலம் - 102 டிகிரி பாரன்ஹீட்
பரங்கிப்பேட்டை - 102 டிகிரி பாரன்ஹீட்
திருப்பத்தூர் - 100 டிகிரி பாரன்ஹீட்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“