சாரண–சாரணியர்க்கு வழங்கும் உணவு பொருட்களை ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் வீர தீர செயல்களிலும் பங்கேற்றார்.
/indian-express-tamil/media/media_files/2025/01/29/scout-event-4.jpeg)
மணப்பாறை அருகே சாரண – சாரணியருக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஸ் பல்வேறு மாநில உணவை சாப்பிட்டு குறைகளை கேட்டறிந்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/01/29/scout-event-2.jpeg)
திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண – சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழா நேற்று தொடங்கியது. இந்த நிகழ்வில் சாரண – சாரணியர் இயக்க மாணவ- மாணவிகள், பொறுப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் என சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 7 நாட்கள் சிப்காட் வளாகத்தில் நிகழ்ச்சி நடக்கும் பகுதியில் தங்குகின்றனர்.
/indian-express-tamil/media/media_files/2025/01/29/scout-event-3.jpeg)
இதில் சாரண- சாரணிய இயக்கத்தை சேர்ந்தவர்களின் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றது. இதற்காக தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாணவ- மாணவிகள் வந்துள்ளனர். அவர்களுக்காக அந்தந்த மாநிலத்திற்கு தகுந்த உணவுகள், அவரவர் விருப்பம் போல் வழங்கப்பட்டு வருகின்றது.
/indian-express-tamil/media/media_files/2025/01/29/scout-event-8.jpeg)
இதையடுத்து, இன்று தமிழ்நாடு பாரத சாரண – சாரணியர் இயக்க தலைவரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யமொழி நிகழ்ச்சி நடைபெறும் மணப்பாறை சிப்காட் வளாகத்திற்கு வருகை தந்தார். அப்போது ஒவ்வொரு மாநில உணவு தயாரிக்கும் பகுதிக்கு சென்று உணவு சுத்தமாக, சுகாதாரமாக தயாரிக்கப்படுகின்றதா என்பதை அந்தந்த உணவு தயாரிக்கும் கூட உங்களுக்குச் சென்று தானே நேரில் ஆய்வு செய்தார். அங்கு உணவில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரத்தையும் பார்வையிட்டார்.
/indian-express-tamil/media/media_files/2025/01/29/scout-event-6.jpeg)
அதன் பின்பு பணியாளர்கள் உள்ளிட்டோர் சாப்பிடும் இடத்திற்கு சென்று அங்கு முதலில் மாணவ- மாணவிகளுடன் சேர்ந்து பொங்கல் சாப்பிட்டார். தொடர்ந்து பல்வேறு மாநிலத்தை சேர்ந்த சாரண – சாரணியர் உள்ள பகுதிக்கு சென்று அங்கு உள்ள உணவையும் சாப்பிட்டு பார்த்த பின் உணவின் சுவை மற்றும் தரம் குறித்து அந்த மாணவ – மாணவிகள் மற்றும் பொறுப்பாளர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார். மேலும், குறை ஏதேனும் இருந்தாலோ, என்ன தேவை என்றாலோ 24 மணி நேரமும் அதற்கான பொறுப்பாளர்கள் இருப்பார்கள், அவர்களிடம் சொன்னால் உடனே நிவர்த்தி செய்யப்படும் என்றும் உறுதியளித்தார். இதுமட்டுமின்றி தமிழக முதல்வர் இந்த நிகழ்வை தொடர்ந்து கண்காணித்து வருகிறார் என்றும் தெரிவித்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/01/29/scout-event-11.jpeg)
அமைச்சர் சாப்பிடுவதில் தொடங்கி எங்கு சென்றாலும் எல்லா மாநில சாரண – சாரணியர் இயக்கத்தை சேர்ந்த மாணவ – மாணவிகள் பொறுப்பாளர்கள், தூய்மைப்பணியாளர் என அனைவரும் ஒன்று சேர்ந்து போட்டி போட்டுக் கொண்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அனைவரிடமும் அன்பு காட்டி, அக்கரையுடன் பேசிய அமைச்சர் சிறுமி ஒருவரை தன் அருகில் நிறுத்தி புகைப்படம் எடுத்து கொண்டார்.
/indian-express-tamil/media/media_files/2025/01/29/scout-event-1.jpeg)
இதைத் தொடர்ந்து, அங்குள்ள வளாகத்தில் ஒவ்வொரு மாநிலத்தை சேர்ந்தவர்களின் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கேரள மாநில மாணவ – மாணவிகள் பேண்டு வாத்தியம் அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. இன்று காலையில் தொடங்கி இரவு வரை 7 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள நிலையில் 3 ம் தேதியுடன் இந்த விழா நிறைவு பெறுகின்றது.
/indian-express-tamil/media/media_files/2025/01/29/scout-event-7.jpeg)
முன்னதாக, இரண்டாம் நாள் நிகழ்வில் இன்று காலை கலந்துகொண்டுள்ள சாரணர்கள் 24க்கும் மேற்பட்ட சாகசப் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
/indian-express-tamil/media/media_files/2025/01/29/scout-event-9.jpeg)
Planks Bridge, Monkey Bridge, Beam Climbing, Tyre Tunnel, Fire Ditch, Gun Shooting, Ring Throw போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக 72 தளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தீரத்துடன் இப்பயிற்சிகளில் பங்கேற்றுள்ள மாணவச் செல்வங்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் தமிழ்நாடு சாரண சாரணையை இயக்க தலைவருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்துகளைத் தெரிவித்து அவரும் பயிற்சியில் ஈடுபட்டார். இது சாரண சாரணிர் நிகழ்வில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் சாரண சாரணியர் மற்றும் அலுவலர்களிடையே மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்