டெல்லியில் உள்ள தமிழக தப்லீக் ஜமாத்தினரை மீட்க கோரி எஸ்டிபிஐ கட்சி வழக்கு
டெல்லியில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த தப்லீக் ஜமாத்தினரை மீட்டுவரக் கோரி எஸ்டிபிஐ சார்பில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்க வேண்டும். இடைக்கால நிவாரணமாக டெல்லியில் முறையான அடிப்படை வசதியில்லாமல் தவித்துவரும் 500க்கும் மேற்பட்ட தமிழகத்தை சேர்ந்த தப்லீக் ஜமாத்தினரை தமிழகத்திற்கு அழைத்துவர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி, புஷ்பா சத்யநாராயணா அமர்வில் காணொளி காட்சியில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு வழக்கறிஞர் தங்கள் மாநிலங்களில் சிக்கியுள்ள வெளி மாநிலத்தவர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்வது தொடர்பாக மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு வழிகாட்டுதல்களுடன் அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து மாநில அரசு வழக்கறிஞர் இதுதொடர்பாக சிறப்பு அதிகாரி மற்றும் மாநிலம் வாரியாக தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இணையதளங்கள் துவங்கப்பட்டு அதன் மூலமும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இந்த நடவடிக்கைகள் மத்திய அரசின் வழிகாட்டுதல் படி நடைபெறுவதாகவும், டெல்லியில் உள்ள தப்லீக் ஜமாத்தினர் போல் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் இருப்பதாகவும் தெரிவித்தார்.
Advertisment
Advertisements
மனுதாரர் சார்பில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களுக்கு தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, தமிழகம் திரும்ப ஆகும் செலவை அவர்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், தமிழக அரசு மீட்டுக் கொண்டுவருதற்கான என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என எழுத்துப்பூர்வமாக மே 12-ம் தேதி பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"