கோவை தெருக்களில் சுற்றி திரியும் நாய்களை பிடித்து மாநகராட்சி ஆணையரிடம் நேரடியாக ஒப்படைக்க போவதாக அறிவித்து எஸ்.டி.பி.ஐ கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/72303c29-070.jpg)
கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் பெருகிவரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க கோரியும் 86, 84, 82 ஆவது வார்டுகளில் தெரு நாய்கள் அதிகரிக்க காரணமாக இருக்கும் நாய் கருத்தடை மையத்தை இடமாற்றம் செய்ய வலியுறுத்தியும் கோவை புல்லுகாடு பகுதியில் உள்ள நாய் கருத்தடை மையம் முன்பு 100க்கும் மேற்பட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
/indian-express-tamil/media/post_attachments/ad4ef679-4e1.jpg)
மேலும் நாளுக்கு நாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் இந்த பகுதியில் நிம்மதியாக வசிக்க முடியவில்லை. குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. தொடர்ச்சியாக தெரு நாய்கள் மனிதர்கள் மட்டும் இல்லாமல் கால்நடைகளையும் தாக்கிய வருவதனால் 82, 84, 86- வது வார்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் இருப்பதாக எஸ்.டி.பி.ஐ கட்சியினர் தெரிவித்தனர்.
/indian-express-tamil/media/post_attachments/398d35de-2c4.jpg)
கோவை மாநகராட்சி நிர்வாகம் புல்லுக்காடு பகுதியில் அமைந்து இருக்கும் நாய் கருத்தடை மையத்தை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தெருக்களில் சுற்றி திரியும் நாய்களை பிடித்து மாநகராட்சி ஆணையரிடம் நேரடியாக ஒப்படைக்க போவதாகவும் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் தெரிவித்தனர்.
பி.ரஹ்மான், கோவை