எஸ்.டி.பி.ஐ.கட்சி தலைவர் ஃபைஸி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கோவை மற்றும் திருச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட பலர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.
அமலாக்கத் துறையினரால் எஸ்.டி.பி.ஐ கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே. ஃபைஸி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.டி.பி.ஐ கட்சி கோவை மத்திய மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை (05.03.2025) நடைபெற்றது.
/indian-express-tamil/media/media_files/2025/03/05/sdpi-protest-i-243501.jpeg)
கோவை கரும்புக்கடை பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பேச்சாளர் வி.எம். அபுதாஹிர் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஃபைசியை விடுதலை செய் அமலாக்க துறையின் கைது அநீதியானது ஒன்றிய பா.ஜ.க அரசே பழிவாங்கும் அரசியலை நிறுத்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.ஃபைஸியை விடுதலை செய் போன்ற கோஷங்களை எழுப்பினர்.
/indian-express-tamil/media/media_files/2025/03/05/sdpi-protest-ii-475194.jpeg)
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாசிசத்திற்கு எதிரான அனைவரும் திரளாக கலந்து கொண்டனர். மேலும், எஸ்.டி.பி.ஐ கட்சியின் தலைவர் எம்.கே.ஃபைஸியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும்
மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
/indian-express-tamil/media/media_files/2025/03/05/sdpi-protest-iii-810192.jpeg)
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் - விடுதலை சிறுத்தைகள் கட்சி - மே 17 இயக்கம் - தமிழ் புலிகள் கட்சி - ஐ.என்.டி.ஜே - எஸ்.டி.பி.ஐ கட்சியின் வர்த்தக அணியினர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் என அனைத்து கட்சிய சார்ந்தவர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/03/05/sdpi-protest-iv-823516.jpeg)
இதே போல, எஸ்.டி.பி.ஐ கட்சி தேசிய தலைவர் எம்.கே ஃபைஸி கைது செய்யப்பட்டதை கண்டித்தும், உடனே அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் திருச்சி பாலக்கரை ரவுண்டானவில் எஸ்.டி.பி.ஐ கட்சி திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செய்தி: பி.ரஹ்மான், க. சண்முகவடிவேல்